வெற்றி பெற்றதும் வேறெங்கும் செல்லாதீர்கள்: வேட்பாளர்களுக்கு விஜய் அறிவுறுத்தல்தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,600 உயர்வு! வெள்ளி கிலோ ரூ. 10,000 உயர்ந்தது!பனையூரில் தவெக வேட்பாளர்களுடன் விஜய் சந்திப்பு!புதுச்சேரி சிறுமி பாலியல் கொலை வழக்கில் தீர்ப்பு! மே 1: ஞாயிறு அட்டவணைப்படி மெட்ரோ ரயில் இயக்கம்!
/

அம்மா மக்கள் முன்னேற்ற கழக செயல்வீரர் கூட்டம்

அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் செயல் வீரர் கூட்டம் காங்கயத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

Updated On :9 ஏப்ரல் 2018, 12:51 am

அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் செயல் வீரர் கூட்டம் காங்கயத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
கூட்டத்துக்கு,  கட்சியின் மாவட்டப் பொருளாளர் சின்னச்சாமி தலைமை வகித்தார். காங்கயம் நகரச் செயலர் செந்தில்குமார் முன்னிலை வகித்தார். மாவட்ட செயலரும்,  முன்னாள் அமைச்சருமான சி.சண்முகவேலு சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு பேசினார்.
இதில்,  ஒன்றிய, நகரப் பகுதிகளில் கட்சிக்கு அதிக எண்ணிக்கையில் உறுப்பினர்களை சேர்க்கவேண்டும்,  பூத் கமிட்டி அமைக்க வேண்டும்,  வார்டு வாரியாக கூட்டம் நடத்தப்பட வேண்டும் என்பன உள்ளிட்ட பணிகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. இதில் கட்சியின் மாவட்ட அவைத் தலைவர் நரேந்திரன் உள்பட ஒன்றிய, நகர நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.