தமிழக அமைச்சரவையில் காங்கிரஸ்: மகிழ்ச்சி அளிக்கிறது - ப.சிதம்பரம்அமைச்சரவையில் எந்தத் துறை அளித்தாலும் மகிழ்ச்சி: கிரிஷ் சோடங்கர்தமிழக அமைச்சரவையில் காங்கிரஸ்: அரசியல் நிகழ்வு அல்ல, உணர்வு! - மாணிக்கம் தாகூர்நீர்நிலைகளில் வண்டல் மண் எடுத்துச்செல்ல விவசாயிகளுக்கு அனுமதி!தவெக அமைச்சரவையில் காங்கிரஸின் ராஜேஷ் குமார், விஸ்வநாதனுக்கு அமைச்சர் பதவி! டிஜிபி வெங்கடராமன் உள்பட 15 ஐபிஎஸ் அதிகாரிகள் மாற்றம்!கேரளத்தில் சில்வர் லைன் அதிவேக ரயில் வழித்தட திட்டம் ரத்து தமிழகத்தின் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்டை தாண்டி வெப்பநிலை பதிவு!
/

பூஜ்ய நிழல் தின விழா

உடுமலையை அடுத்துள்ள ராகல்பாவி ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளியில் பூஜ்ய நிழல் தின விழா செவ்வாய்க்கிழமை கொண்டாடப்பட்டது.

Updated On :18 ஏப்ரல் 2018, 9:38 am IST

உடுமலையை அடுத்துள்ள ராகல்பாவி ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளியில் பூஜ்ய நிழல் தின விழா செவ்வாய்க்கிழமை கொண்டாடப்பட்டது.
இதையொட்டி ஆசிரியர் கண்ணபிரான் பூஜ்ய நிழல் தினம் குறித்து மாணவ, மாணவிகளிடம் விளக்கிப் பேசியதாவது:
சூரியனால் உருவாகும் ஒரு பொருளின் நிழல் அதிக நீளத்தோடு இருக்கும். இந்த நிழலானது நீளத்தில் குறைந்து கொண்டே வந்து உச்சி வேளையில் மிகக் குறைந்து,  பின் மீண்டும் சூரியன் மறையும் வரை வளர்ந்து அதிகமாகிக் கொண்டே செல்லும்.  ஆனால் வருடத்தில் 2 நாள்களில் மட்டும் பொருளின் நிழலானது அப்பொருளு க்கு மிகச் சரியாக கீழே விழுவதால் நம்மால் அப்பொருளின் நிழலை 12 மணி உச்சி வேளையில் கூட காண இயலாது. நிழல் காண இயலா அந்நாளே பூஜ்ய நிழல் நாள் என்றழைக்கப்படுகிறது. 
சூரிய ஒளியினால் உண்டாகக்கூடிய ஒரு பொருளின் நிழலைக் கொண்டு நம்மால் சூரியனின் இயக்கம்,  சூரிய ஆரம்,  பூமியின் நேரம்,  நாம் இருக்கக் கூடிய இடத்தின் அட்சய ரேகை அமைப்பு ஆகியவற்றை கண்டறியலாம் என்றார். 
இதைத் தொடர்ந்து நண்பகல் 12 மணி அளவில் இந்த பூஜ்ய நிழல் நிகழ்வை பள்ளி மாணவர்கள் உற்று நோக்கினர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.