உடுமலை ஜிவிஜி விசாலாட்சி மகளிர் கல்லூரியில் பேரவை, மன்றங்கள் துவக்க விழா புதன்கிழமை நடைபெற்றது.
ஜிவிஜி கலையரங்கில் நடைபெற்ற இந்த விழாவுக்கு கல்லூரிச் செயலர் கெ.ரவீந்திரன் தலைமை வகித்தார். கல்லூரிப் பேரவைத் தலைவி எம்.ஸ்மிர்தி ஆண்டறிக்கை வாசித்தார். பேராசிரியர் வி.கே.சரஸ்வதி வரவேற்றார்.
திருப்பூர் மாவட்ட ஆட்சியர் கே.எஸ்.பழனிசாமி சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார். பேராசிரியர் கலைச்செல்வி உறுதிமொழி வாசிக்க மாணவிகள் வழிமொழிந்தனர்.
விழாவில் சுற்றுச்சூழலை வலியுறுத்தும் விதமாக துணிப் பைகள், மரக்கன்றுகள் வழங்கப்பட்டன. கோட்டாட்சியர் எஸ்.அசோகன், ஆர்ஜிஎம் அறக்கட்டளைத் தலைவர் நந்தினி ரவீந்திரன், பேராசிரியர்கள் விழாவில் கலந்து கொண்டனர். பேரவைத் துணைச் செயலளர் அகல்யா நன்றி கூறினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.








