‘வெற்றித் தமிழ்நாடு முதலீட்டாளா் மாநாடு’: இன்று தொடங்கி வைக்கிறாா் முதல்வா் ஈரான் அச்சுறுத்தல்: துருக்கியிலிருந்து மாற்று விமானத்தில் டிரம்ப் ரகசியப் பயணம்! மேற்காசியப் போரால் சமையல் எண்ணெய் விலை உயா்வு: அரசு விளக்கம்எம்பிபிஎஸ், பிடிஎஸ் கலந்தாய்வு இன்று தொடக்கம்: தரவரிசைப் பட்டியலில் 363 போ் கூடுதலாக இணைந்ததால் குழப்பம் காவிரி விவகாரம்: கா்நாடகத்தில் இன்று முழு அடைப்புக்கு கன்னட அமைப்புகள் அழைப்பு
/

அமராவதி அணையில் தொடர்ந்து உபரி நீர் வெளியேற்றம்

திருப்பூர் மாவட்டம், உடுமலை அருகே உள்ள அமராவதி அணையில் இருந்து புதன்கிழமையும் உபரி நீர் வெளியேற்றப்பட்டது.

Updated On :30 ஜனவரி 2024, 10:01 pm IST

திருப்பூர் மாவட்டம், உடுமலை அருகே உள்ள அமராவதி அணையில் இருந்து புதன்கிழமையும் உபரி நீர் வெளியேற்றப்பட்டது.
உடுமலையை அடுத்துள்ள அமராவதி அணையின் மூலம் திருப்பூர், கரூர் மாவட்ட ங்களில் உள்ள சுமார் 55 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெற்று வருகின்றன. நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பலத்த மழை பெய்து வந்ததால் ஜூலை 16 ஆம் தேதி அணை முழுக் கொள்ளளவை எட்டியதைத் தொடர்ந்து அணையில் இருந்து உபரி நீரை வெளியேற்றபட்டது.  அப்போது தொடர்ந்து 13 நாள்கள் உபரி நீர் வெளியேற்றப்பட்டது. இந்நிலையில் ஆகஸ்ட் 8 ஆம் தேதி முதல் மேற்குத் தொடர்ச்சிமலை பகுதியில் தொடர்ந்து கன மழை பெய்தது.  இதனால் இரண்டாவது முறை அணை முழுக் கொள்ளளவை எட்டும் நிலை ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து ஆகஸ்ட் 9 ஆம் தேதி முதல் அணையில் இருந்து உபரி நீர் வெளியேற்றப்பட்டது. இந்நிலையில், கேரள மாநிலம், மூணாறு பகுதியில் கடந்த சில நாள்களாக இடை விடாது கன மழை பெய்து வருகிறது. இதனால் அமராவதி அணைக்கு உள்வரத்தாக 10 ஆயிரம் கன அடிக்கு மேல் தண்ணீர் வந்தது. இதனால் செவ்வாய்க்கிழமை அதிகபட்சம் அணையில் இருந்து 13 ஆயிரம் கன அடி தண்ணீர் உபரி நீராக வெளியேற்றப்பட்டது. இது படிப்படியாக குறைக்கப்பட்டு 7 ஆயிரம் கன அடி தண்ணீர் உபரி நீராக வெளியேற்றப்பட்டது. இதனால் உடுமலை, தாராபுரம், கரூர் வரையில் அமராவதி ஆற்றின் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டது.  இந்நிலையில் புதன்கிழமை தொடர்ந்து அணைக்கு உள்வரத்து அதிக அளவில் வந்து கொண்டிருந்ததால் ஆற்றின் மூலம் 5 ஆயிரம் கன அடி தண்ணீர் உபரி நீராக வெளியேற்றப்பட்டு வருகிறது. பொதுப் பணித்துறையினர் அணைப் பகுதியில் 24 மணி நேர கண்காணிப்பு பணிகளை மேற்கொ ண்டு வருகின்றனர்.                                                                  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.