தேர்தல் வழக்கு: முதல்வர் விஜய்க்கு அபராதம் விதிக்கப்படும்! உயர் நீதிமன்றம் எச்சரிக்கை! எல்லை பிரச்னை! சீன துணை அதிபருடன் அஜித் தோவல் சந்திப்பு! சென்னையில் புதிதாக 130 ஏசி மின்சார பேருந்துகள்: முதல்வர் விஜய் தொடக்கி வைத்தார்!டெட் தேர்வில் இருந்து விலக்களிக்கக் கோரி அமைச்சர் ராஜ்மோகன் தனித் தீர்மானம்!ஓணம் திருநாள்: பிற்பகல் வரை செயல்படும் ரயில் முன்பதிவு மையங்கள்!சென்னையில் இரவு நேர மின்சார ரயில்கள் இன்று முதல் ரத்து!நீண்ட நாள்களுக்குப் பிறகு குறைந்த தங்கம் விலை!டெட் தேர்வில் இருந்து விலக்களிக்கக் கோரி அமைச்சர் ராஜ்மோகன் தனித் தீர்மானம்!

உடுமலை வட்டத்தில் சுதந்திர தின விழா கொண்டாட்டம்

உடுமலை வட்டத்தில் கல்லூரிகள், பள்ளிகள் ஆகியவற்றில் 72 ஆவது சுதந்திர தின விழா புதன்கிழமை கோலாகலமாக கொண்டாடப்பட்டது.

Published On :30 ஜனவரி 2024, 10:01 pm IST

உடுமலை வட்டத்தில் கல்லூரிகள், பள்ளிகள் ஆகியவற்றில் 72 ஆவது சுதந்திர தின விழா புதன்கிழமை கோலாகலமாக கொண்டாடப்பட்டது.
சைனிக் பள்ளி:
உடுமலையை அடுத்துள்ள அமராவதி நகர் சைனிக் பள்ளியில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில்,  பள்ளி முதல்வர் அமிர்த் குர்குரே தேசியக் கொடியை ஏற்றி வைத்து மாணவர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார். இதையொட்டி பல்வேறு கலை நிகழ்ச்சிகள், விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றன. மரக் கன்றுகள் நடுவிழா நடைபெற்றது. துணை முதல்வர் கட்டபொம்மன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
ஜிவிஜி கல்லூரி:
உடுமலை ஜிவிஜி விசாலாட்சி மகளிர் கல்லூரியில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில் முதல்வர் கலைச்செல்வி தேசியக் கொடியை ஏற்றி வைத்தார். இதையொட்டி என்சிசி மாண விகளின் அணிவகுப்பு நடைபெற்றது. சுதந்திரப் போராட்ட தியாகிகள் குறித்து மாணவி சுஜிதா கிருபாளினி பேசினார். 
ருத்ரவேணி பாலிடெக்னிக்:
பாலப்பம்பட்டி ருத்ரவேணி முத்துசாமி பாலிடெக்னிக் கல்லூரி யில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில் கல்லூரி கல்வி நெறியாளர் எம்.ராமநாதன் தேசியக் கொடியை ஏற்றினார். கல்லூரி முதல்வர் கண்ணன் பேசினார். 
வித்யநேத்ரா பள்ளி:
கோமங்கலம் வித்யநேத்ரா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில் பள்ளி முதல்வர் கோபாலகிருஷ்ணன் தேசியக் கொடி யை ஏற்றினார். கலை இலக்கிய போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள், சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. பள்ளித் தலைவர் டாக்டர் கே.பாலசுந்தரம், செயலர் நந்தகோபாலகிருஷ்ணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
ஆதர்ஷ் பள்ளி: 
உடுமலையை அடுத்துள்ள பள்ளபாளையம் ஸ்ரீ ஆதர்ஷ் மெட்ரிக். பள்ளியில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில் பள்ளி இயக்குநர் பி.எம்.பாலசுப்பிரமணியம் தேசியக் கொடியை ஏற்றிவைத்தார். இதையொட்டி கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. முதல்வர் ஜீ .ஜீவராஜ் அலெக்சாண்டர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
எஸ்கேபி பள்ளி:
உடுமலை எஸ்கேபி மேல் நிலைப் பள்ளியில் நடைபெற்ற விழாவில் தலைமை ஆசிரியர் கே.டி.பூரணி தேசியக் கொடியை ஏற்றி வைத்தார். விழாவில் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. பள்ளிச் செயலர் கே.ஆர்.கே.ராதா கிருஷ்ணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
ஜேஎஸ்ஆர் பள்ளி:
மடத்துக்குளம் ஜேஎஸ்ஆர் மேல்நிலைப் பள்ளியில் சுதந்திர தினத்தையொட்டி பல்வேறு திறனறிப் போட்டிகள் நடத்தப்பட்டு சிறப்பிடம் பெற்றவர்களுக்குப் பரிசுகள் வழங்கப்பட்டன. பள்ளி நிர்வாக ஆலோசகர் கருப்பையா தேசியக் கொடியை ஏற்றி வைத்தார்.
ராகல்பாவி பள்ளி:
ராகல்பாவி ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளியில் நடைபெற்ற சுதந்திர தினவிழாவில் பல்வேறு கலை நிகழ்ச்சிகள், விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றன. தலைமை ஆசிரியர் மு.சாவித்திரி, ஆசிரியர் கண்ணபிரான் உள்ளிட்ட பலர் பேசினர்.
பூலாங்கிணறு பள்ளி:
பூலாங்கிணறு அரசு மேல் நிலைப் பள்ளியில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில் தலைமை ஆசிரியர் என்.சந்திரன் தேசியக் கொடியை ஏற்றி வைத்தார். தொடர்ந்து, கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன. என்எஸ்எஸ் அலுவலர் செ.சரவணன் உள்ளிட்டோர் ஏற்பாடுகளை செய்திருந்தனர். 
ஆர்விஜி பள்ளி:
குறிச்சிக்கோட்டை ஆர்விஜி மேல் நிலைப்பள்ளியில் நடை பெற்ற சுதந்திர தின விழாவுக்கு, தாளாளர் விமலாம்மாள் தலைமை வகித்தார். தலைமை ஆசிரியர் கே.கந்தசாமி தேசியக் கொடியை ஏற்றி வைத்துப் பேசினார். பொதுத் தேர்வில் சிறப்பிடம் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
காங்கிரஸ் கட்சி:
உடுமலை நகர இளைஞர் காங்கிரஸ் சார்பில் நடைபெற்ற சுதந்திர தின விழாவையொட்டி குட்டைத் திடலில் உள்ள மகாத்மா காந்தி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. மாநில பொதுக் குழு உறுப்பினர் பொன்.பலராமன், நகரத் தலைவர் கோ.ரவி, இளைஞரணி தலைவர் எஸ்.அருண்பிரசாத் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
கிளை நூலகம்:
உடுமலை உழவர் சந்தை எதிரே உள்ள கிளை நூலகம் எண்-2 ல் சுதந்திர தின விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. நூலகர் வீ.கணேசன் தேசியக் கொடியை ஏற்றி வைத்தார். இதையொட் டி நூலக வாசகர் வட்டம் சார்பில் கலை இலக்கிய போட்டிகள் நடத்தப்பட்டுப் பரிசுகள் வழங்க ப்பட்டன.
ருத்ரப்ப நகர் குடியிருப்போர் நலச் சங்கம்:
இந்த அமைப்பின் சார்பில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில் தலைவர் ராமலிங்கம் தேசியக் கொடியை ஏற்றி வைத்தார். செயலாளர் எஸ்.கலைராஜன் சுதந்திர தியாகிகள் குறித்துப் பேசினார். முன்னாள் நகர மன்ற உறுப்பினர் எம்.மோகன்குமார் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.