இயக்குநர் பாக்யராஜுக்கு நாளை காலை இறுதிச் சடங்கு!கே. பாக்யராஜ் உடலுக்கு எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி நேரில் அஞ்சலி! தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவராக மாணிக்கம் தாகூர் நியமனம்!கே. பாக்யராஜுக்கு முதல்வர் விஜய் அஞ்சலி! சாந்தனுவை ஆரத்தழுவி ஆறுதல்!!திமுக கூட்டணியிலிருந்து மதிமுக விலகல்!
/

விளைபொருள்களுக்கு ஆதார விலை நிர்ணயம்: விவசாயிகள் சங்க மாநாட்டில் கோரிக்கை

விவசாய விளை பொருள்களுக்கு ஆதார விலை நிர்ணயிக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Updated On :25 டிசம்பர் 2018, 8:21 am IST

விவசாய விளை பொருள்களுக்கு ஆதார விலை நிர்ணயிக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் உடுமலை வட்டார மாநாடு  ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:
உடுமலை, மடத்துக்குளம் வட்டங்களில் தக்காளி அதிக அளவு உற்பத்தியாகும்போது விலை கிடைக்காமல் விவசாயிகள் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர். எனவே தக்காளியை மதிப்புக் கூட்டும் பொருளாக மாற்றும் ஆலையைத் துவக்க வேண்டும். மேலும் குளிர்பதனக் கிடங்கையும் அமைக்க வேண்டும். 
மக்காச்சோள அறுவடை துவங்கியுள்ள நிலையில் அதை மார்க்கெட்டிங் கமிட்டி கிடங்குகளில் இருப்பு வைக்கும் விவசாயிகளுக்கு தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகள் மூலம் வட்டியில்லாக் கடன் வழங்க வேண்டும். 
உடுமலை வட்டத்தில் எலையமுத்தூர், ஜல்லிபட்டி, தளி, சி.குமாரபாளையம், குறிச்சிக்கோட்டை ஆகிய கிராமங்களில் காட்டுப் பன்றிகள் விளைநிலங்களில் புகுந்து பயிர்களை சேதப்படுத்துகின்றன. எனவே வனத்துறை மூலம் காட்டுப் பன்றிகளை பிடிப்பதற்கு ஏற்பாடு செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் மாநாட்டில் நிறைவேற்றப்பட்டன. 
நிர்வாகிகள் வி.சௌந்திரராஜன், கே.எஸ்.ரணதேவ் உள்ளிட்டோர் இதற்கான ஏற்பாடுகளைச் செய்திருந்தனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.