காமன்வெல்த் பளுதூக்குதலில் வெண்கலம் வென்றார் பிந்தியாராணி தேவி!நாமக்கல் கவிஞர் மாளிகைக்கு மாறுகிறது முதல்வர் அலுவலகம்! அதிகாரப்பூர்வ அறிவிப்பு!சிவகாசியில் சட்டவிரோத பட்டாசு ஆலைகள் செயல்படுகின்றனவா? ஆய்வு செய்ய முதல்வர் உத்தரவுசென்னை தலைமைச் செயலகம் முன்பு விவசாயிகள் போராட்டம்கரூர் அரசுப் பணி ஆணை ரத்து: உச்சநீதிமன்றம் செல்ல தவெக திட்டம்!போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் கைது; விடுவிக்கவில்லை என்றால் மீண்டும் போராட்டம் - சிஜேபிசென்னை கோயம்பேடு கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தில் முதல்வர் சி. ஜோசப் விஜய் ஆய்வுகரூரில் முதல்வர் விஜய் வழங்கிய அரசுப் பணி ஆணைகள் ரத்து! - உயர் நீதிமன்றம்
/

பழையகோட்டை மாட்டுச் சந்தை மீண்டும் துவக்கம்:  ரூ. 11 லட்சத்துக்கு காங்கேயம் இன மாடுகள் விற்பனை

நத்தக்காடையூர் அருகே பழையகோட்டையில் மாட்டுச் சந்தை ஞாயிற்றுக்கிழமை முதல் மீண்டும் செயல்படத் துவங்கியுள்ளது.

Updated On :30 ஜனவரி 2024, 11:31 pm IST

நத்தக்காடையூர் அருகே பழையகோட்டையில் மாட்டுச் சந்தை ஞாயிற்றுக்கிழமை முதல் மீண்டும் செயல்படத் துவங்கியுள்ளது. இதில், காங்கேயம் இன மாடுகள் ரூ. 11 லட்சத்துக்கு விற்பனையாயின.
காங்கயம் அருகே, நத்தக்காடையூர்- பழையகோட்டையில் காங்கேயம் இன மாடுகளுக்கான பிரத்யேக சந்தை நடைபெற்று வருகிறது. 
இந்தச்  சந்தையில் காங்கேயம் இன மாடுகள் மட்டுமே விற்பனைக்கு அனுமதிக்கப்படுகின்றன. 
இது இடைத்தரகர் இல்லாத சந்தை என்பதால் விவசாயிகளிடம் வரவேற்பைப் பெற்றுள்ளது. இந்த மாட்டுச் சந்தையில் மாடுகளுக்கு நல்ல விலை கிடைக்கிறது.
கால்நடைகளுக்கு ஏற்பட்டு வரும் கோமாரி நோயின் தாக்குதலால், மாட்டுச் சந்தைகளை தற்காலிகமாக மூட அரசு உத்திரவிட்டிருந்தது. 
இதையடுத்து கடந்த சில வாரங்களாக மூடப்பட்டிருந்த இந்த சந்தை, ஞாயிற்றுக்கிழமை மீண்டும் செயல்படத் துவங்கியது.
ஞாயிற்றுக்கிழமை நடந்த சந்தையில் 48 காங்கேயம் இன மாடுகள் விற்பனைக்குக் கொண்டு வரப்பட்டிருந்தன. 
இதில் பசுங்கன்றுகள் ரூ. 15 ஆயிரம் முதல் ரூ. 30 ஆயிரம் வரை விற்பனையாயின. காளைக் கன்றுகள் ரூ. 15 ஆயிரம் முதல் ரூ. 50 ஆயிரம் வரை விற்கப்பட்டன. 
இந்த வாரச் சந்தையில் 23 மாடுகள் மொத்தம் ரூ. 11 லட்சத்துக்கு விற்பனையாயின. அதிகபட்சமாக ரூ. 84 ஆயிரத்துக்கு கன்றுக் குட்டியுடன் காங்கேயம் இனப் பசு விற்பனையானது. 
வரும் வாரத்தில் அதிக அளவில் மாடுகள் விற்பனைக்கு வர வாய்ப்புள்ளது என சந்தை மேற்பார்வையாளர்கள் தெரிவித்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.