கருமாரம்பாளையம் பகுதியில் உள்ள சாக்கடையில் பின்னலாடைத் தொழிலாளி ஒருவர் கத்திக்குத்து காயங்களுடன் சடலமாக ஞாயிற்றுக்கிழமை மீட்கப்பட்டார்.
இதுகுறித்து திருப்பூர் வடக்கு காவல் துறையினர் கூறியதாவது:
திருப்பூர்- ஊத்துக்குளி சாலையில் உள்ள கருமாரம்பாளையம், கருப்பராயன் கோயில் அருகே உள்ள சாக்கடையில் இளைஞர் ஒருவர் சடலமாகக் கிடப்பதாக காவல் துறையினருக்குத் தகவல் கிடைத்தது.
அங்கு சென்ற திருப்பூர் வடக்கு காவல் துறையினர் சடலத்தை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இதையடுத்து நடத்திய விசாரணையில், கொலை செய்யப்பட்ட நபர் சுகுமாறன் நகரைச் சேர்ந்த வி.ரமேஷ் (35) என்பதும், அதே பகுதியில் உள்ள பின்னலாடை நிறுவனத்தில் டெய்லராகப் பணியாற்றி வந்ததும் தெரியவந்தது.
இவருக்கு மனைவியும், 2 வயதில் ஆண் குழந்தையும் உள்ளனர். ரமேஷுக்கு மது அருந்தும் பழக்கம் இருந்ததால் குடும்பத்தில் தகராறு இருந்துள்ளது. சனிக்கிழமை இரவும் ரமேஷ் மது அருந்தி வந்ததால் வீட்டில் தகராறு ஏற்பட்டதாகத் தெரிகிறது. அதன் பிறகு வீட்டை விட்டு வெளியே சென்ற ரமேஷ் வீடு திரும்பவில்லை.
இந்த நிலையில் வயிற்றில் கத்தியால் குத்தப்பட்ட நிலையில் சாக்கடையில் சடலமாகக் கிடந்துள்ளார். இதுகுறித்து திருப்பூர் வடக்கு காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்துகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

இன்றைய செய்திகள் ஜூலை 26 - நேரலை

மாப்ள சீமான்... இதேபோன்ற மேடை 2 மாதங்களுக்கு முன்பு அமைந்திருந்தால்...: நயினார் நாகேந்திரன் பேச்சு!

தூத்துக்குடி பனிமய மாதா பேராலயத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்!

கார்கில் போர் நினைவிடத்தில் அமைச்சர் ராஜ்நாத் சிங் மரியாதை!
விடியோக்கள்

யார் இந்த துணிச்சலான பெண்! காவல் வாகனத்தை தனி ஆளாக தடுத்து நிறுத்தியவர்! | CJP | BJP

CJP போராட்டத்தில் இனி...? | DINAMANI EXCLUSIVE | Dharmendra Pradhan | BJP | Abhijeet Dipke

தர்மேந்திர பிரதான் பதவி விலகினால் எல்லாம் சரியாகிவிடுமா?: அமைச்சர் நிர்மல் குமார் | TVK | BJP


