வெள்ளக்கோவில் நகரில் பிளாஸ்டிக் ஒழிப்பை வலியுறுத்தி மினி மாரத்தான் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
வெள்ளக்கோவில் காவல் நிலைய ஆய்வாளர் மு.ஜெயபாலன் மாரத்தான் ஓட்டத்தைத் துவக்கி வைத்தார். கொங்கு வேளாளர் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி செயலாளர் வி.சி.கருணாகரன், நிழல்கள் அறக்கட்டளை மகாதேவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
வள்ளியிரச்சல் சாலையில் மின்சார வாரிய அலுவலகம் அருகில் துவங்கிய மாரத்தான், 4 கி.மீ. தொலைவைக் கடந்து முத்தூர் சாலை- தண்ணீர்ப்பந்தல் பகுதியில் நிறைவடைந்தது. இதில் சமூக ஆர்வலர்கள், மாணவர்கள், காவல் துறையினர், பொதுமக்கள் பங்கேற்றனர். பிளாஸ்டிக் பொருள்களைத் தவிர்ப்போம் என மாரத்தானில் சென்றவர்கள் வலியுறுத்தினர்.
மாரத்தானில் அனைவரும் பச்சை வண்ணத்தில் தொப்பி அணிந்திருந்தனர். பிளாஸ்டிக் தடையை வலியுறுத்தி இப்பகுதியில் இதுபோல மாரத்தான் நடந்தது இதுவே முதன்முறையாகும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.








