/

தீ விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண உதவி அளிப்பு

திருப்பூர் அருகே தீ விபத்தில் வீடுகளை இழந்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு சட்டப்பேரவை உறுப்பினர் சார்பில் நிவாரண உதவி வழங்கப்பட்டது.

News image
Updated On :5 பிப்ரவரி 2018, 1:30 am

DIN

திருப்பூர் அருகே தீ விபத்தில் வீடுகளை இழந்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு சட்டப்பேரவை உறுப்பினர் சார்பில் நிவாரண உதவி வழங்கப்பட்டது.
திருப்பூர், மாநகராட்சி 31-ஆவது வார்டுக்கு உள்பட்ட வாய்க்கால்மேடு, சேர்மன் கந்தசாமி நகர், 5-ஆவது வீதியில் ராமசாமி என்பவர் கூரையால் அமைக்கப்பட்ட வீடுகளை வாடகைக்கு விட்டுள்ளார். இதில் 10 வீடுகளில் பின்னலாடைத் தொழிலாளர்கள் குடும்பத்தோடு தங்கி வசித்து வருகின்றனர். இந்நிலையில் அங்கு தீப் பிடித்தது. தீயணைப்புத் துறையினர் சென்று தீயை அணைப் பதற்குள் 8 வீடுகளும் எரிந்து சேதமாயின. இதில், அந்த வீடுகளில் குடியிருந்தவர்களின் உடமைகள் எரிந்து சேதமாயின. 
இந்நிலையில், தீ விபத்தால் பாதிக்கப்பட்ட 10 குடும்பங்களுக்கும்  திருப்பூர் தெற்கு சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினர் நிதியிலிருந்து தலா ரூ.5 ஆயிரம் வீதம் முதல்கட்ட நிவாரண உதவியாக வழங்கப்பட்டது. மேலும், அரிசி, பருப்பு உள்ளிட்ட பொருள்களும் வழங்கப்பட்டன . நிவாரண உதவிகளை சட்டப் பேரவை உறுப்பினர் சு.குணசேகரன் வழங்கினார். வட்டாட்சியர் கோபாலகிருஷ்ணன், அதிமுக நிர்வாகி சடையப்பன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.