வெள்ளக்கோவிலில் இலவச அமரர் ஊர்தி சேவை கிடைக்க வேண்டும் என ஏழை, எளிய மக்கள் எதிர்பார்க்கின்றனர்.
வெள்ளக்கோவிலில் உயிரிழந்தவர்களை பெரும்பாலும் உள்ளூர் மயானத்தில் அடக்கம் செய்கின்றனர். மேலும், ஐந்து கிலோ மீட்டர் தூரத்தில் கணபதிபாளையத்தில் உள்ள நகராட்சி எரிவாயு மயானத்தைப் பயன்படுத்தி வருகின்றனர். தற்போது அனைத்துத் தரப்பினரும் தனியார் ஆம்புலன்ஸ் சேவையை நாடி வருகின்றனர்.
ஐந்து கிலோ மீட்டர் தொலைவு வரை ரூ.1,300, கூடுதலான தொலைவுக்கு அதிகத் தொகை எனக் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இந்தச் செலவை ஏழை, எளிய மக்களால் ஈடுகட்ட முடிவதில்லை. எனவே, தனியார் அமைப்புகளோ, தொண்டு நிறுவனங்களோ இலவச அமரர் ஊர்தி சேவையை வழங்க முன்வர வேண்டும் என பல்வேறு தரப்பினரும் எதிர்பார்க்கின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.








