உணவுப் பாதுகாப்பு விழிப்புணர்வுப் பேரணி

உணவுப் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வுப் பேரணி தாராபுரத்தில் புதன்கிழமை நடைபெற்றது.
Updated on
1 min read

உணவுப் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வுப் பேரணி தாராபுரத்தில் புதன்கிழமை நடைபெற்றது.
மகாராணி பாலிடெக்னிக் கல்லூரி நாட்டு நலப்பணித் திட்ட பிரிவு சார்பில் நடைபெற்ற இந்தப் பேரணிக்கு, கல்லூரித் தலைவர் ஜி.எம்.அகமது இப்ராஹீம் தலைமை வகித்தார். முதல்வர் செந்தில்குமார் முன்னிலை வகித்தார். 
மாவட்ட உணவு பாதுகாப்பு அலுவலர் என்.தமிழ்ச்செல்வன் பேரணியைத் துவக்கிவைத்தார். புதிய பேருந்து நிலையம் அருகே துவங்கிய பேரணி,  பொள்ளாச்சி சாலை, கடைவீதி, பூங்கா சாலை உள்ளிட்ட நகரின் முக்கிய சாலைகள் வழியாக நகராட்சி அலுவலகம் முன்பு நிறைவுற்றது. 
பேரணியில் கலப்பட உணவுகளைக் கண்டுபிடித்தல், விரைவு உணவுகளைத் தவிர்த்தல், உணவை வீணாக்குவதை தவிர்த்தல், சுகாதாரம் ஆகியவை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டதுடன் பொதுமக்களுக்கு துண்டுபிரசுரமும் விநியோகிக்கப்பட்டது. பேரணியையொட்டி விழிப்புணர்வு கலைநிகழ்ச்சியும் நடைபெற்றது.
பேரணிக்கான ஏற்பாடுகளை கல்லூரி நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர் கார்த்திக் ராஜா தலைமையில் ஊழியர்கள் செய்திருந்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com