காங்கிரஸின் கிறிஸ்டோபர் திலக், தேமுதிகவின் எல்.கே. சுதீஷ் வேட்புமனு தாக்கல்!போர் வாசலுக்கு வந்துவிட்டது; மெளனம் காக்கும் மோடி! ராகுல் கண்டனம் மாநிலங்களவைத் தேர்தல்: திமுகவின் திருச்சி சிவா, ரவீந்திரன் வேட்புமனு தாக்கல்!மாநிலங்களவை உறுப்பினராகிறார் நிதீஷ் குமார்! முதல்வர் பதவியிலிருந்து விலகல்!மாநிலங்களவைத் தேர்தல்: அதிமுகவின் தம்பிதுரை வேட்புமனு தாக்கல்!மாநிலங்களவை தேர்தல்: அன்புமணி வேட்புமனுத் தாக்கல்!தேமுதிக மாநிலங்களவை வேட்பாளர் எல்.கே. சுதீஷ்!இந்தியாவுக்கு 95 லட்சம் பீப்பாய் எண்ணெய் அனுப்ப ரஷியா தயார்! தவெகவை காட்டி கூடுதல் தொகுதிகள் பெற்ற காங்கிரஸ்! செங்கோட்டையன் காங்கிரஸ் மாநிலங்களவை வேட்பாளர் கிறிஸ்டோபர் திலக்!
/

தேசிய அறிவியல் தினம்

உடுமலை அருகே உள்ள ராகல்பாவி ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளியில் தேசிய அறிவியல் தினம் புதன்கிழமை கொண்டாடப்பட்டது. 

News image
Updated On :1 மார்ச் 2018, 1:38 am

DIN

உடுமலை அருகே உள்ள ராகல்பாவி ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளியில் தேசிய அறிவியல் தினம் புதன்கிழமை கொண்டாடப்பட்டது. 
நிகழ்ச்சிக்கு,  தலைமை ஆசிரியர் சாவித்திரி தலைமை வகித்தார். உதவி தலைமை ஆசிரியர் கண்ணபிரான், தேசிய அறிவியல் தினம் கொண்டாடப்படுவதன் முக்கியத்துவம் குறித்தும்,  நோபல் பரிசு பெற்ற சர் சி.வி.ராமன் குறித்தும் எடுத்துக் கூறினார். இதையொட்டி சர் சி.வி.ராமனின் வாழ்க்கை வரலாறு காணொலி படம் மூலம் விளக்கப்பட்டது.  புவி வெப்பமாதல் என்ற தலைப்பில் ஓவியப் போட்டி நடைபெற்றது. 
இதைத் தொடர்ந்து சர் சி.வி.ராமன் போன்ற முகமூடிகளை அணிந்து அறிவியல் மற்றும் தொழில் நுட்பத்தை ஆக்கத்துக்காக பயன்படுத்துவோம்,  புதிய கண்டுபிடிப்புகளை உருவாக்குவோம், இந்தியாவை அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தில் சிறந்து விளங்க பாடுபடுவோம் என்று மாணவர்கள் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். ஓவியப் போட்டியில் கலந்து கொண்ட அனைவருக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.