புதிய முகவரிக்கு குடிபெயர்ந்தார் நிதீஷ் குமார்! 98.47 சதவீத ரூ.2,000 நோட்டுகள் திரும்பிவிட்டன: ரிசா்வ் வங்கி மேற்கு வங்கம்: 15 வாக்குச்சாவடிகளில் நாளை மறுவாக்குப்பதிவு! ஜிஎஸ்டி வருவாய் ரூ. 2.43 லட்சம் கோடியாக உயர்வு! கொடைக்கானலில் வாகனங்களுக்கு 2 நாள் இலவச அனுமதி! தங்கம் விலை ஒரேநாளில் 2ஆவது முறையாக குறைவு! தேர்தல் முடிந்தவுடன் சிலிண்டர் விலையை உயர்த்திய பாஜக அரசு: மு.க. ஸ்டாலின் கண்டனம் வணிக சிலிண்டர் விலை உயர்வு ஒவ்வொருவரின் உணவுத் தட்டிலும் எதிரொலிக்கும்! ராகுல் கண்டனம் ம.பி. படகு விபத்து! தாய் - மகன் கட்டிப்பிடித்தபடி உடல்கள் மீட்பு!
/

வெள்ளக்கோவிலில் நூற்பாலையில் தீ விபத்து

வெள்ளக்கோவிலில் உள்ள ஒரு நூற்பாலையில் புதன்கிழமை நிகழ்ந்த தீ விபத்தில் இயந்திரத்தின் சில பாகங்கள் உள்ளிட்ட பொருள்கள் எரிந்து சேதமாயின.

Updated On :29 மார்ச் 2018, 3:15 am

வெள்ளக்கோவிலில் உள்ள ஒரு நூற்பாலையில் புதன்கிழமை நிகழ்ந்த தீ விபத்தில் இயந்திரத்தின் சில பாகங்கள் உள்ளிட்ட பொருள்கள் எரிந்து சேதமாயின.
  வெள்ளக்கோவில், குட்டக்காட்டுப்புதூரில் திருமூர்த்தி (45) என்பவருக்குச் சொந்தமான நூற்பாலை உள்ளது. இங்குள்ள புளோரூம் இயந்திரத்தில் புதன்கிழமை திடீரென தீப்பிடித்தது. மின் கசிவு காரணமாகத் தீப்பிடித்ததாகக் கூறப்படுகிறது.
  தகவலின்பேரில் சம்பவ இடத்துக்குச் சென்ற வெள்ளக்கோவில் தீயணைப்பு நிலைய அலுவலர் சி.தனசேகரன், நிலைய போக்குவரத்து அலுவலர் வேலுச்சாமி உள்ளிட்ட தீயணைப்பு வீரர்கள் ஒருமணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.  தீ விபத்தில் இயந்திரத்தின் சில பாகங்கள், நூல் கோன்கள் எரிந்து சேதமடைந்தன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.