உடுமலை மற்றும் அமராவதி வனச் சரகங்களில் வன விலங்குகள் கணக்கெடுப்புப் பணி திங்கள்கிழமை தொடங்கியது.
ஆனைமலை புலிகள் காப்பகம் 958 சதுர கிலோமீட்டர் பரப்பளவு கொண்டது. இதில் 447 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட உடுமலை மற்றும் அமராவதி வனச் சரகங்களில் புலி, சிறுத்தை, யானை, மான், காட்டெருமை, செந்நாய் உள்ளிட்ட பல்வேறு அரிய வகை விலங்கினங்கள் வசித்து வருகின்றன. ஆண்டுதோறும் இந்த இரு வனச் சரகங்களிலும் கோடைக் காலம் மற்றும் குளிர் காலத்தில் வன விலங்குகள் கணக்கெடுப்புப் பணிகள் நடத்தப்படுவது
வழக்கம். இதன்படி இந்த இரு வனச் சரகங்களில் மே 21ஆம் தேதி முதல் 28ஆம் தேதி வரை வன விலங்குகள் கணக்கெடுப்புப் பணி நடைபெற உள்ளது.
இதற்காக உடுமலை மற்றும் அமராவதி வனச் சரகங்களில் 42 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஒரு குழுவுக்கு ஒரு வன ஊழியர், ஒரு வேட்டைத் தடுப்புக் காவலர், ஒரு தன்னார்வலர் நியமிக்கப்பட்டு இந்தப் பணிகளை கவனிப்பர்.
ஒரு நாளைக்கு 3 கிலோ மீட்டர் சுற்றளவுக்கு பணிகள் நடைபெற உள்ளன. வன விலங்குகளின் கால்தடம், நகங்கள் பதிவு மற்றும் எச்சம் ஆகியவற்றை வைத்து இந்த கணக்கெடுப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன.
இதையொட்டி கணக்கெடுப்பாளர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. உடுமலை வனச் சரகர் நவீன், அமராவதி வனச் சரகர் முருகேசன் ஆகியோர் இதற்கான ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
அடைபட்ட நீா்வழிப்பாதைகளால் குளங்களில் நீா் நிரம்புவதில் சிக்கல்
நாகப்பட்டினம் புதிய கடற்கரை மேம்படுத்தப்படுமா?

முதல் நாள் அறிவிப்பு; மறுநாளே ரத்து! பேசுபொருளாகும் விஜய்யின் பிரசாரம்!
இரட்டை இயக்குநர்களின் இயக்கத்தில்...
வீடியோக்கள்

DINAMANI வார ராசிபலன்! | Apr. 12 முதல் Apr. 18 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு

தில்லியை வென்று நம்பிக்கையைப் பெறுமா சிஎஸ்கே? | CSK v DC Match Preview |
தினமணி செய்திச் சேவை

LIK Movie Review | தீமா.. தீமா.. தேறுமா! | Pradeep Ranganathan | Vignesh Shivan | krithi shetty
தினமணி செய்திச் சேவை

புதுச்சேரி & கேரளத்தில் வாக்குப்பதிவு நிறைவு! வாக்குப்பதிவில் நடந்த சுவாரசியங்கள்!
தினமணி செய்திச் சேவை

