அவிநாசியை அடுத்த முறியாண்டம்பாளையத்தில் சீரான குடிநீர் வழங்கக் கோரி அப்பகுதிமக்கள் திங்கள்கிழமை அவிநாசி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டு மனு அளித்தனர்.
மனுவில் கூறியிருப்பது: அவிநாசி ஒன்றியம், முறியாண்டாம்பாளையம் ஊராட்சியில் 1000-க்கும் மேற்பட்டோர் வசித்து வருகிறோம். எங்கள் பகுதியில் சமீபகாலமாக கடும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் விலைக்கு வாங்கி நீரை பயன்படுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகின்றனர். ஆழ்குழாய் கிணற்று நீர் விநியோகம் செய்யப்பட்டு 4 ஆண்டுகள் ஆகிறது.
பலமுறை புகார் அளித்தும் எவ்வித நடவடிக்கையும் இல்லை. அதேபோல் ஆற்றுக் குடிநீரும் மாதம் இருமுறை வழங்கப்பட்டு வந்த நிலையில் கடந்த 2 மாத காலமாக அந்த நீரும் சீராக கிடைப்பதில்லை. எனவே எங்களுக்கு போர்க் கால அடிப்படையில் குடிநீர் வசதி செய்துதர வேண்டும் என்று தெரிவித்துள்ளனர். மனுவை பெற்றுக் கொண்ட அலுவலர்கள்ஆழ்குழாய் கிணறுகளுக்கு மின்மோட்டார் பொருத்தி உடனடியாக குடிநீர் வசதி செய்துதரப்படும் என உறுதி அளித்தனர். இதையடுத்து அனைவரும் கலைந்து சென்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

திடீரென பெய்த ஆலங்கட்டி மழை: விவசாயிகள்,மக்கள் மகிழ்ச்சி!

மு.க. ஸ்டாலின்தான் மீண்டும் முதல்வர்: செல்வப்பெருந்தகை

ம.பி. படகு விபத்து! தாய் - மகன் கட்டிப்பிடித்தபடி உடல்கள் மீட்பு! கலங்கும் உறவுகள்

செயின்ட் ஜார்ஜ் கோட்டையில் எடப்பாடியார் ஆட்சி அமைப்பார்: கடம்பூர் ராஜு
வீடியோக்கள்

Dinamani வார ராசிபலன்! | May 3 முதல் 9 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு
Podcast | Exit Polls சொல்வது நடக்குமா? | News and Views | Epi - 30
தினமணி செய்திச் சேவை

Kara Movie Review | Dhanush - Vignesh Raja கூட்டணி வெல்லுமா? | Dinamani Talkies
இணையதளச் செய்திப் பிரிவு
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

