திருப்பூரில் இருசக்கர வாகனத்தின் மீது அரசுப் பேருந்து மோதியதில் இளைஞர் திங்கள்கிழமை உயிரிழந்தார். இதையடுத்து பேருந்தை சிறைபிடித்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருப்பூரில் காங்கேயம் சாலை அமர்ஜோதி கார்டன் பகுதியில் வசித்து வருபவர் கார்த்திக் (28). இவர் திருப்பூர் வளம் பாலம் அருகே இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது சேலத்திலிருந்து திருப்பூர் நோக்கி வந்த அரசுப் பேருந்து இரு சக்கர வாகனத்தின் மீது மோதியது. இதில் படுகாயமடைந்த கார்த்திக் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இதையடுத்து பொதுமக்கள், விபத்துக்குள்ளாக்கிய பேருந்தையும், ஓட்டுநர் முருகன் மற்றும் நடத்துநரை சிறை பிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவலறிந்து வந்த வடக்கு போலீஸார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர். இதையடுத்து அனைவரும் கலைந்து சென்றனர்.
போலீஸார் வழக்குப் பதிவு செய்து ஓட்டுநர் முருகனை கைது செய்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

வெறுப்பு அரசியல்

ஈரான் கப்பலைச் சிறைபிடித்த அமெரிக்கா! போர்நிறுத்தம் தொடருமா?

ஜனநாயகன் கற்பூரி தாக்கூர்

அடுத்த 4 நாள்களுக்கு 3 டிகிரி வரை வெப்பநிலை அதிகரிக்கும்!
வீடியோக்கள்

யார் தோற்பது என்ற போட்டியில் வென்ற சிஎஸ்கே! | Chennai Super Kings | Ayush Mhatre |
தினமணி செய்திச் சேவை
பிரகாஷ்ராஜ் அரசியலில் என்ன செய்துவிட்டார்? குஷ்பு பேட்டி | DMK | BJP
இணையதளச் செய்திப் பிரிவு

பெண்களுக்கு எதிரான எண்ணம்! திமுக, காங்கிரஸை விமர்சித்த அமித் ஷா | BJP
தினமணி செய்திச் சேவை

"சென்னை சூப்பர் - 6" திமுகவின் அறிவிப்புகள் என்ன? எழிலன் நாகநாதன் விளக்கம்!
இணையதளச் செய்திப் பிரிவு

