அவிநாசியில் கிணற்றுக்குள் தவறி விழுந்த மூதாட்டியைக் காப்பாற்ற முயன்ற இளைஞர் தண்ணீரில் மூழ்கி வியாழக்கிழமை உயிரிழந்தார்.
திருப்பூர் மாவட்டம், அவிநாசி அருகே ராயங்கோயில் காலனி, ஆலங்காட்டுத் தோட்டம் பகுதியைச் சேர்ந்தவர் ஆறுமுகம் (65). இவரது மனைவி மசிரியாத்தாள்(60). இவர் மனநிலை பாதிக்கப்பட்டவராம். இந்நிலையில், வியாழக்கிழமை காலை 9 மணி அளவில் மசிரியாத்தாள் அப்பகுதியில் உள்ள 100அடி ஆழமுள்ள கிணற்றில் விழுந்துள்ளார். இதைப் பார்த்த அதே பகுதியைச் சேர்ந்த முருகாத்தாள் (40) மகன்கள் சுபாஷ் (எ) ராஜ்குமார்( 20), வெங்கடேஷ் (19) மற்றும் சிலர் மூதாட்டியை மீட்கும் நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
கிணற்றுக்குள் தத்தளித்த மூதாட்டியைக் காப்பாற்றுவதற்காக சுபாஷ் கிணற்றுக்குள் குதித்துள்ளார். அப்போது, கிணற்றுக்குள் உள்ள பாறையில் அடிபட்டு தண்ணீரில் மூழ்கிவிட்டார். இதற்கிடையில், வெங்கடேஷ் உள்ளிட்டோர் கயிறு மூலமாக மூதாட்டியை மீட்டனர்.
தகவலறிந்து சம்பவ இடத்துக்குச் சென்ற தீயணைப்புத் துறையினர் சுபாஷ் உடலை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். மாலை 5.40 மணி வரை போராடியும் அவரது உடலை மீட்க இயலவில்லை. இதையடுத்து கிணற்றில் 30 அடிக்கு மேல் உள்ள நீரை வெளியேற்றும் முயற்சியில் தீயணைப்புத் துறையினர், போலீஸார், பொதுமக்கள் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில், மீட்கப்பட்ட மூதாட்டி மசிரியம்மாள் திருப்பூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இது குறித்து அவிநாசி போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனர்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

கங்கையில் பிரியாணி சாப்பிட்டதற்கு 3 மாதம் சிறையா..?- உச்ச நீதிமன்ற நீதிபதி வேதனை

காமன்வெல்த்தில் 'ஹாட்ரிக்' தங்கம் வென்ற மீராபாய் சானு - புகைப்படங்கள்

காமன்வெல்த் போட்டி: இந்தியாவுக்கு முதல் தங்கப் பதக்கம் வென்று கொடுத்த மீராபாய் சானு!






