பாரம்பரிய சித்த மருத்துவர்களுக்கு தமிழக அரசுப் பதிவு வழங்க வேண்டும் என்று தமிழ் பாரம்பரிய சித்த மருத்துவப் பாதுகாப்பு இயக்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
இது குறித்து இயக்கம் சார்பில் தமிழக முதல்வருக்கு அனுப்பப்பட்டுள்ள மனு:
தமிழகத்தில்ஆயிரத்திற்கும் மேற்பட்ட பரம்பரை சித்த மருத்துவர்கள் உள்ளனர். இவர்களுக்கு 1993 ஆம் ஆண்டு தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா அரசுப் பதிவு வழங்கி வாழ்வாதாரம் அளித்தார். டெங்கு, விஷ ஜுரம் போன்றவைகளுக்கு நிலவேம்புக் குடிநீர், மலைவேம்பு கஷாயம், பப்பாளிச் சாறு போன்ற இயற்கை மூலிகை மருந்துகளை அரசு மருத்துவமனைகளில் வழங்க உத்தரவிட்டு, சித்த மருத்துவத்தின் சிறப்பை வெளிப்படுத்தினார். கருவுற்ற தாய்மார்களுக்கு மாதுளை மணப்பாகு, உரை மருந்துகள் ஆகிய 11 வகையான சித்த சஞ்சீவி மருந்து பெட்டகம் வழங்கி சித்த மருத்துவத்திற்கு சிறப்பு செய்தார்.
தற்போதைய அரசும் பதிவு பெறாத பரம்பரை மருத்துவர்களுக்கு அரசுப் பதிவு வழங்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.







