திருப்பூரில் பன்றிக் காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டு பெண் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தார்.
திருப்பூர், காங்கயம் சாலை புஷ்பா நகர் 4ஆவது வீதியைச் சேர்ந்த பொன்னுசாமி மனைவி வளர்மதி (55). இவருக்கு கடந்த 15 நாள்களாக காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் திருப்பூர் அரசு மருத்துவமனையில்அனுமதிக்கப்பட்டார்.
அங்கு அவரைப் பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவருக்குப் பன்றிக் காய்ச்சல் அறிகுறி இருப்பதாக தெரிவித்தனர். இதைத் தொடர்ந்து அவர் கோவை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு வளர்மதி ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.








