திருப்பூர், ஈஸ்வரன் கோயில் வீதியில் உள்ள பூ மார்க்கெட் முகப்பு வாயில் சுவர் இடிந்து விழுந்தது.
திருப்பூர், ஈஸ்வரன் கோயில் வீதியில் உள்ள பூ மார்க்கெட் கட்டடம் 50 ஆண்டுகள் பழைமை வாய்ந்தது. இந்தக் கட்டடத்தில் 100க்கும் மேற்பட்ட பூக்கடைகள் செயல்பட்டு வருகின்றன.
எப்போதும் மக்கள் நெருக்கடி மிகுந்துள்ள இந்தப் பகுதியில், பூ மார்கெட் கட்டடத்தின் முகப்பு வாயில் சுவரில் ஆலமரம் வேர் ஊன்றி வளர்ந்து வருகிறது. இதனால் முகப்புச் சுவர் முழுவதும் விரிசல் ஏற்பட்டு இருந்தது.
இந்நிலையில், சுவற்றின் மேல் பகுதி கற்கள் ஞாயிற்றுக்கிழமை பெயர்ந்து விழுந்தன. மேலும் கட்டடத்தின் பெரும்பாலான பகுதிகளில் விரிசல் ஏற்பட்டுள்ளது.
எனவே, அசம்பாவிதங்கள் ஏதும் ஏற்படும் முன்னர் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பூ மார்க்கெட் கட்டடத்தைச் சீரமைக்க வேண்டும் என கடைகாரர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

உ.பி: விமான நிலையத்தில் நாட்டுத் துப்பாக்கியுடன் பயணி கைது

மேற்கு, மத்திய, தென் மாவட்டங்களுக்கு சிறந்த நாள்! இடியுடன்கூடிய மழை பெய்யும்!

டூரிஸ்ட் ஃபேமலி ஓராண்டு நிறைவு... அபிஷன் ஜீவிந் பகிர்ந்த பதிவு!

தெப்போற்சவம் முதல் கும்பாபிஷேகம் வரை.. எந்த கோயிலில் என்ன விசேஷம்?
வீடியோக்கள்

Dinamani வார ராசிபலன்! | May 3 முதல் 9 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு
Podcast | Exit Polls சொல்வது நடக்குமா? | News and Views | Epi - 30
தினமணி செய்திச் சேவை

Kara Movie Review | Dhanush - Vignesh Raja கூட்டணி வெல்லுமா? | Dinamani Talkies
இணையதளச் செய்திப் பிரிவு
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

