
உள்ளாட்சித் தேர்தலுக்கான வைப்புத் தொகையை திரும்ப பெற்றுக்கொள்ள நகராட்சி அழைப்பு
பல்லடம் நகராட்சியில் உள்ளாட்சித் தேர்தல் வேட்பு மனுவுக்காக வைப்பு தொகையை செலுத்தியவர்கள் அதை திரும்பபெற நகராட்சி நிர்வாகம் அழைப்பு விடுத்துள்ளது.
பல்லடம் நகராட்சியில் உள்ளாட்சித் தேர்தல் வேட்பு மனுவுக்காக வைப்பு தொகையை செலுத்தியவர்கள் அதை திரும்பபெற நகராட்சி நிர்வாகம் அழைப்பு விடுத்துள்ளது.
பல்லடம் முதல் நிலை நகராட்சியில் உள்ள 18 வார்டுகளுக்கு 2016 ஆம் ஆண்டு அறிவிக்கப்பட்டு சென்னை உயர் நீதிமன்றத்தின் உத்தரவுப்படி நிறுத்தி வைக்கப்பட்ட உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட 102 பேர் வேட்பு மனு தாக்கல் செய்திருந்தனர்.
அவர்கள் செலுத்திய வேட்பு மனு வைப்புத் தொகையை திரும்ப அளிக்க அரசு உத்தரவிட்டது. அதன்படி இதுவரை 66 பேர் பணத்தை திரும்ப பெற்றனர். 36 பேர் இதுவரை பணத்தை திரும்ப பெறாமல் உள்ளனர். அவர்கள் பணம் செலுத்தியற்கான ரசீது நகலுடன் வைப்புத் தொகை வேண்டி விண்ணப்பித்து பணத்தை பெற்றுக் கொள்ளலாம் என்று பல்லடம் நகராட்சி நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





