தமிழ்நாட்டில் 40 நகராட்சி நிர்வாகத் துறை அலுவலகங்களில் சோதனை!ஆசிய விளையாட்டு: மகளிர் கிரிக்கெட்டில் இந்திய அணிக்கு தங்கம்!தமிழ்நாட்டில் அதிகரிக்கும் டெங்கு! இதுவரை 17,348 பேர் பாதிப்பு!தொடர் சரிவில் தங்கம் விலை! இன்றைய நிலவரம்வடகிழக்கு பருவமழை: மாவட்ட ஆட்சியர்களுடன் முதல்வர் விஜய் 2-வது நாளாக ஆலோசனை!புதிய சொத்துக்குவிப்பு வழக்கில் இருந்து எம்.ஆர்.கே.பன்னீர்செல்வத்தை விடுவிக்க மறுப்புகாமராஜர் காலை உணவுத் திட்டம்: முதல்வர் விஜய் தொடங்கி வைத்தார்!பொன்னேரியில் மருத்துவமனை ஊழியரை பெட்ரோல் ஊற்றி கொல்ல முயன்றவர் சுட்டுப்பிடிப்புமேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்களில் மழை வாய்ப்பு2027 மாா்ச்-க்குள் 1 லட்சம் வீடுகளில் மேற்கூரை சூரியசக்தி மின்சாரம்: நிர்மல்குமாா்தனியாா் பேருந்து கட்டண உயா்வு: தமிழக அரசு அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு

ஆடை வடிவமைப்புப் போட்டி: நிஃப்ட்-டீ கல்லூரி மாணவர்கள் சிறப்பிடம்

கோவையில் நடைபெற்ற ஆடை வடிவமைப்புப் போட்டியில் திருப்பூர் நிஃப்ட் - டீ கல்லூரி மாணவர்களுக்கு சிறப்புப் பரிசு கிடைத்துள்ளது.

Published On :

கோவையில் நடைபெற்ற ஆடை வடிவமைப்புப் போட்டியில் திருப்பூர் நிஃப்ட் - டீ கல்லூரி மாணவர்களுக்கு சிறப்புப் பரிசு கிடைத்துள்ளது.
இதுதொடர்பாக கல்லூரி நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கை:
கோவை ஹிந்துஸ்தான் கல்லூரியில் சுமார் 25 கல்லூரிகளைச் சேர்ந்த 100 வடிமைப்பாளர்கள் பங்கேற்ற ஆடை வடிவமைப்புப் போட்டி அண்மையில் நடைபெற்றது. பெண்களை மேம்படுத்துதல் என்ற தலைப்பையொட்டி, இந்திய பாரம்பரியம், இந்திய - மேற்கத்திய இணைப்பு, மேற்கத்திய வடிவமைப்பு என 3 பிரிவுகளில் 11 வகையான போட்டிகள் நடத்தப்பட்டன.
இதில், நிஃப்ட் - டீ கல்லூரியில் பி.எஸ்சி. ஆடை வடிவமைப்பு (ஏ.எப்.டி.) முதலாம் ஆண்டு,  3 ஆம் ஆண்டு பயிலும் 9 மாணவ,  மாணவியர் பங்கேற்று 5 விதமான வடிவமைப்புகளை உருவாக்கியிருந்தனர். இதில், முதலாம் ஆண்டு பயிலும் எஸ்.நாகோசுவரன், எஸ்.நபீஷா ஆகியோரின் வடிவமைப்புகள் சிறப்புப் பரிசு பெற்றன.  சிறப்பிடம் பெற்ற மாணவர்களை கல்லூரி முதல்வர் கே.பி.பாலகிருஷ்ணன், துணை முதல்வர்கள், துறைத் தலைவர்கள், பேராசிரியர்கள் பாராட்டினர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.