பக்ரீத், வார இறுதி: 4,195 சிறப்பு பேருந்துகள்!ஜூலையில் பத்தாம் வகுப்பு துணைத் தோ்வு: இன்று முதல் விண்ணப்பிக்கலாம்குல்மார்க்கில் கேபிள் கார்களில் பரிதவித்த 300 சுற்றுலாப் பயணிகள் 6 மணி நேர போராட்டத்துக்குப் பின் பத்திரமாக மீட்பு!எச்.வி. ஹண்டே, எழுத்தாளர் சிவசங்கரி பத்ம ஸ்ரீ விருதை பெற்றுக்கொண்டனர் திரையரங்குகளில் பண்டிகை, விடுமுறை நாள்களில் 5 காட்சிகள்! - முதல்வர் விஜய் அறிவிப்புசிறு விவசாயிகளுக்கு ரூ. 25,000 வரையிலான கடன் தள்ளுபடி: முதல்வர் விஜய்குறு விவசாயிகளுக்கு ரூ. 50,000 வரையிலான பயிர்க் கடன்கள் தள்ளுபடி : முதல்வர் விஜய்குதிரை வேகத்தில் நடக்கும் குதிரை பேரம்! - மு.க. ஸ்டாலின் விமர்சனம்கீழ்தளத்தில் ராஜிநாமா; மேலே கட்சியில் இணைப்பு! தவெகவுக்கு இபிஎஸ் கடும் கண்டனம்!!மின்னல் வேகத்தில் தவெக உறுப்பினர் அட்டை! இது 100% குதிரை பேரம்! - அதிமுக எம்.பி., இன்பதுரை ராஜிநாமா செய்த எம்.எல்.ஏ.க்கள் முதல்வர் விஜய் உடன் சந்திப்பு!திவிஷா சர்மா வழக்கில் சிபிஐ விசாரணை - உச்ச நீதிமன்றம்அதிமுக எம்.எல்.ஏ.க்களின் ராஜிநாமா கடிதம் ஏற்பு: அவைத்தலைவர் ஜேசிடி பிரபாகர்!ராஜிநாமா செய்த அதிமுக எம்.எல்.ஏ.க்கள் மூவர் தவெகவில் ஐக்கியம்!வேலுமணி தரப்பு எம்.எல்.ஏக்கள் மூவர் ராஜிநாமா!
/

உடுமலையில் பிளாஸ்டிக் பொருள்கள் பறிமுதல்

உடுமலையில் பிளாஸ்டிக் பொருள்கள்செவ்வாய்க்கிழமை பறிமுதல் செய்யப்பட்டன.

Updated On :23 ஜனவரி 2019, 9:44 am IST

உடுமலையில் பிளாஸ்டிக் பொருள்கள்செவ்வாய்க்கிழமை பறிமுதல் செய்யப்பட்டன.
உடுமலையில், தமிழக அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருள்கள் ஒருசில கடைகளில் விற்பனை செய்யப்பட்டு வருவதாக புகார்கள் எழுந்தன. இதையடுத்து, நகராட்சி ஆணையாளர் ஓ.ராஜாராம் உத்தரவின்பேரில் நகராட்சி சுகாதார ஆய்வாளர்கள் நகரில் உள்ள கடைகளில் செவ்வாய்க்கிழமை திடீர் சோதனையிட்டனர். மத்திய பேருந்து நிலையம், பழனிப் பாதை, கல்பனா திரையரங்கு சாலை ஆகிய இடங்களில் உள்ள கடைகளில் பிளாஸ்டிக் பைகள், பிளாஸ்டிக் டம்பளர்கள், பிளாஸ்டிக் பாட்டில்கள் விற்பனை செய்யப்படுவது கண்டறியப்பட்டது. இதையடுத்து,  75 கிலோ பிளாஸ்டிக் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன. கடை உரிமையாளர்களுக்கு ரூ. 2 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. சுகாதார ஆய்வாளர் சிவகுமார் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.