சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் தொழிலாளிக்கு திருப்பூர் மகளிர் நீதிமன்றம் 17 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.
மதுரை மாவட்டம், திருமங்கலத்தைச் சேர்ந்தவர் பாலகிருஷ்ணன் (40). இவர், திருப்பூர் மாவட்டம், முத்தூர் அருகே அட்டை பெட்டி தயாரிக்கும் தொழிற்சாலையில் தொழிலாளியாகப் பணியாற்றி வந்தார்.
இந்நிலையில் பாலகிருஷ்ணன், 2015 பிப்ரவரி 3 ஆம் தேதி அதே தொழிற்சாலையில் பணியாற்றி வரும் வடமாநிலத் தம்பதியின் 13 வயது சிறுமியை அழைத்துக் கொண்டு உடுமலையில் உள்ள தனது உறவினரான சின்னமாரிமுத்துவின் (38) வீட்டுக்குச் சென்றுள்ளார். பின்னர் அவர் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.
இது குறித்து சிறுமியின் பெற்றோர் கொடுத்த புகாரின்பேரில் பாலகிருஷ்ணன், அவருக்கு உடந்தையாக இருந்த சின்னமாரிமுத்து ஆகிய இருவரையும் காங்கயம் போலீஸார் கைது செய்தனர். இந்த வழக்கானது திருப்பூர் மாவட்ட மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கின் மீதான இறுதிக் கட்ட விசாரணை நிறைவடைந்து நீதிபதி ஜெயந்தி செவ்வாய்க்கிழமை தீர்ப்பு வழங்கினார்.
பாலகிருஷ்ணனுக்கு 17 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ. 20 ஆயிரமும், சின்னமாரிமுத்துவுக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.15 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பளிக்கப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ராகுல், பிரியங்காவை விமா்சித்து காங்கிரஸ் அலுவலகத்தில் போஸ்டா்: கேரள காவல் துறை வழக்குப் பதிவு
மோகன் பகான் - ஈஸ்ட் பெங்கால் ‘டிரா’
மேற்கு வங்கம்: வயல்வெளியில் குவியலாக வாக்காளா் அட்டைகள் - போலீஸ் விசாரணை

குருவாயூா் - சென்னை இடையே இயக்கப்படும் ரயில்கள் நிலையங்கள் மாற்றி இயக்கம்
விடியோக்கள்

வெளியானது 'தி ரேஜ்' லிரிக் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியானது பிளாஸ்ட் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு
தவெக அரசுக்கு 6 மாதங்கள் அவகாசம் கொடுங்கள்: கமல்ஹாசன் | CM Vijay | Kamal Haasan |
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | சிஎஸ்கே பிளே ஆஃப் செல்ல என்னென்ன வாய்ப்புகள் உள்ளன? | Chennai Super Kings | CSK vs SRH |
தினமணி செய்திச் சேவை
