மனதின் குரல் நிகழ்ச்சி: வெய்யிலில் இருந்து மக்கள் தற்காத்துக் கொள்ள பிரதமர் மோடி அறிவுறுத்தல்!சென்னை: கோயம்பேட்டில் காரை ஏற்றி இளம்பெண் கொலை பெட்ரோல், டீசல் ஏற்றுமதி மீதான கொள்ளை லாபத் தடுப்பு வரியில் தளர்வு: ஜூன் 1 முதல் அமல்தில்லியில் மெட்ரோ நிலையம் அருகே அடுக்குக் கட்டடம் இடிந்து விபத்து: 12 பேர் மீட்புஇரண்டாம் முறையாக பட்டம் வெல்வது யாா்? பெங்களூரு - குஜராத் இன்று மோதல்! 1,200 கோயில்களின் நகைகள், சொத்துகள் விரைவில் கணக்கெடுப்பு: திருவிதாங்கூா் தேவஸ்வம் திட்டம்கடற்கரை - செங்கல்பட்டு மின்சார ரயில்: உச்ச நேரங்களில் 6 - 10 நிமிஷங்களுக்கு ஒரு ரயில்!
/

அவிநாசியில் அதிகாரிகளுடன் ஆய்வுக் கூட்டம்

மத்திய அரசின் திட்டங்கள் குறித்து அனைத்துத் துறை அலுவலர்களுடனான ஆய்வுக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது. 

Updated On :24 ஜனவரி 2019, 1:36 am IST

மத்திய அரசின் திட்டங்கள் குறித்து அனைத்துத் துறை அலுவலர்களுடனான ஆய்வுக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது. 
அவிநாசி ஊராட்சி ஒன்றிய அலுவலகக் கூட்டரங்கில் நடைபெற்ற இக் கூட்டத்துக்கு  மாவட்ட ஆட்சியர் கே.எஸ்.பழனிசாமி முன்னிலை வகித்தார். தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையத்தின் தேசிய துணைத் தலைவர் எல்.முருகன் தலைமை வகித்தார். இதில் அவர் பேசியதாவது: 
மாவட்டந்தோறும் தாழ்த்தப்பட்டோருக்காக மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சித் திட்டங்கள் ஆய்வு செய்யப்பட்டு வருகின்றன. தாட்கோ மூலம் தொழில்முனைவோர்களுக்கு உரிய வங்கிக் கடன் பெற்று வழங்கவும், கடன் திட்டங்களை எஸ்.சி., எஸ்.டி. பிரிவினருக்கு எவ்வித காலதாமதமின்றி உரிய முறையில் வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. 
மத்திய அரசின் திட்டங்களால் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் அனைத்துத் துறை அலுவலர்களும் தங்களது பணிகளை சிறப்பான முறையில் மேற்கொள்ள வேண்டும் என்றார்.
இதில், தாட்கோ திட்டத்தின் கீழ் 20 பேருக்கு புதிதாகத் தொழில் தொடங்குவதற்கு ரூ. 30 லட்சத்து 33 ஆயிரம் மானிய உதவியுடன் கூடிய வங்கிக் கடன் வழங்கப்பட்டது.  
மாவட்ட ஊரக வளர்ச்சி முகமைத் திட்ட இயக்குநர் ரமேஷ்குமார், உதவி இயக்குநர்  (ஊராட்சிகள்) பாலசுப்பிரமணியம், தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணைய ஆய்வு அலுவலர் லிஸ்டர், மாவட்ட ஆதி திராவிடர், பழங்குடியினர் நல அலுவலர் மகாராஜன், ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) அரசப்பன், மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் சுந்தரமூர்த்தி, அவிநாசி வட்டார வளர்ச்சி அலுவலர்கள் வே.மீனாட்சி, டி.சாந்திலட்சுமி உள்ளிட்டோர்  பங்கேற்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.