முகப்பு அனைத்துப் பதிப்புகள் கோயம்புத்தூர் திருப்பூர்
ஊதியூர் கொங்கண சித்தர் கோயிலில் நாளை பஞ்சகலச யாக பூஜை
By DIN | Published On : 30th July 2019 08:38 AM | Last Updated : 30th July 2019 08:38 AM | அ+அ அ- |

காங்கயம் அருகே ஊதியூர் மலையில் உள்ள பிரசித்தி பெற்ற கொங்கணச் சித்தர் கோயிலில் புதன்கிழமை (ஜூலை 31) பஞ்ச கலச யாக பூஜை நடைபெற உள்ளது.
கொங்கணச் சித்தர் 800 ஆண்டுகள் தவம் செய்ததாகக் கூறப்படும் ஊதியூர் மலை மிகவும் பிரசித்தி பெற்ற மலையாகும். இந்த மலையில் மூலிகைச் செடிகள் நிறைந்துள்ளன. இங்குள்ள கொங்கணச் சித்தர் கோயிலில் ஆடி அமாவாசை நாளான புதன்கிழமை (ஜூலை 31) பகல் 12 மணிக்கு சுவாமிக்கு அபிஷேக ஆராதனையும், மாலை 6 மணிக்கு சிறப்பு பஞ்ச கலச யாக பூஜையும் நடைபெற உள்ளன. பக்தர்களுக்கு மூலிகை ரசம் வழங்கப்படும். பூஜைக்கான ஏற்பாடுகளை கோயில் நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.