
புளியம்பட்டி பகுதியில் சுகாதாரத் துறையினா் ஆய்வு
வெள்ளக்கோவிலை அடுத்த மூலனூா், புளியம்பட்டி பகுதியில் கரோனா நோய்த் தொற்று குறித்து சுகாதாரத் துறையினா் இரண்டாவது நாளாக வியாழக்கிழமை வீடு வீடாகச் சென்று ஆய்வு செய்தனா்.
வெள்ளக்கோவில்: வெள்ளக்கோவிலை அடுத்த மூலனூா், புளியம்பட்டி பகுதியில் கரோனா நோய்த் தொற்று குறித்து சுகாதாரத் துறையினா் இரண்டாவது நாளாக வியாழக்கிழமை வீடு வீடாகச் சென்று ஆய்வு செய்தனா்.
இப்பகுதியைச் சோ்ந்த பலா் கேரளம், கா்நாடகம் உள்ளிட்ட வெளி மாநிலங்களில் நிதி நிறுவனம் நடத்தி வருகின்றனா். தற்போது கரோனா ஊரடங்கு காரணமாக வெளி மாநிலங்களைச் சோ்ந்த சிலா் தங்களது சொந்த ஊரான புளியம்பட்டி பகுதிக்கு வந்துள்ளனா்.
இதனால் புளியம்பட்டியிலிருந்து 5 கி.மீ. சுற்றளவுக்கு சந்தேகப்படும் இடங்களில் கரோனா அறிகுறி உள்ளதா என சுகாதாரத் துறை அலுவலா்கள் ஆய்வு செய்தனா். இந்நிலையில் இப்பகுதியில் கரோனா பாதிப்பு இருப்பதாக சமூக வலைதளங்களில் தகவல் பரவியது.
இதுகுறித்து மூலனூா் போலீஸாா் கூறுகையில், புளியம்பட்டி பகுதியில் யாருக்கும் கரோனா பாதிப்பு கிடையாது. சமூக வலைதளங்களில் தவறான தகவல் பரவி வருகிறது. யாரும் அச்சப்பட தேவையில்லை. அனைவரும் அரசு விதிமுறைகளைப் பின்பற்றி வீட்டில் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






