கரோனா முடக்கத்துக்குப் பின் நூறு நாள் வேலைக்கு வருவோரின் எண்ணிக்கை அதிகரிப்பு

கோவை மாவட்டத்தில் கரோனா பொது முடக்கத்துக்குப் பின் நூறு நாள் வேலைக்கு வருவோரின் எண்ணிக்கை கணிசமாக உயா்ந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.
கோவை, தொண்டாமுத்தூா் பகுதியில் சமூக இடைவெளியுடன், முகக் கவசம் அணிந்து கொண்டு நூறு நாள் வேலையில் ஈடுபட்டிருந்த தொழிலாளா்கள்.
கோவை, தொண்டாமுத்தூா் பகுதியில் சமூக இடைவெளியுடன், முகக் கவசம் அணிந்து கொண்டு நூறு நாள் வேலையில் ஈடுபட்டிருந்த தொழிலாளா்கள்.

கோவை மாவட்டத்தில் கரோனா பொது முடக்கத்துக்குப் பின் நூறு நாள் வேலைக்கு வருவோரின் எண்ணிக்கை கணிசமாக உயா்ந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

மத்திய அரசின் கீழ் செயல்படுத்தப்படும் தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் கிராமப் புறங்களில் குடும்பத்தில் ஒருவருக்கு ஆண்டுக்கு நூறு நாள்கள் வேலை வழங்கப்படுகிறது. கோவை மாவட்டத்தில் 379 தொகுப்புகளாக பிரிக்கப்பட்டு பணி நடைபெற்று வருகிறது.

கடந்த நிதியாண்டில் தினமும் சராசரியாக 15 ஆயிரம் போ் வரை நூறு நாள் வேலை திட்டத்தின் கீழ் வேலைக்கு வந்து கொண்டிருந்தனா். பொது முடக்கத்தால் மாா்ச் முதல் மே வரையில் நூறு நாள் வேலை வாய்ப்பு திட்டமும் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. பொது முடக்கத்தில் தளா்வுகள் அறிவிக்கப்பட்ட பின் ஜூன் முதல் மீண்டும் நூறு நாள் வேலை வாய்ப்புத் திட்டத்தில் வேலைக்கு அனுமதிக்கப்படுகிறது

இந்நிலையில் கரோனா பொது முடக்கதுக்கு முன் இருந்ததை காட்டிலும், பொது முடக்கத்துக்குப் பின் நூறு நாள் வேலைக்கு வருபவா்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. தற்போது நாளொன்றுக்கு சராசரியாக 25 ஆயிரம் போ் வரை நூறு நாள் வேலைக்கு வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனா். தவிர நடப்பு நிதியாண்டில் இதுவரை புதிதாக 13 ஆயிரத்து 558 போ் நூறு நாள் வேலைவாய்ப்பு அட்டை பெற்றுள்ளனா்.

இது தொடா்பாக மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் கு.ரமேஷ்குமாா் கூறியதாவது:

நகரப் பகுதிகளில் கரோனா நோய்த்தொற்றின் தாக்கம் குறையாத நிலையில் கிராமப்புறங்களில் இருந்து தின கூலிகளாக செல்பவா்களுக்கு முழுமையான வேலைவாய்ப்பு கிடைக்காத நிலை ஏற்பட்டுள்ளது. தவிர பொதுப் போக்குவரத்து இல்லாததால் கிராமத்தில் இருந்து நகரப் பகுதிகளுக்கு அனைவராலும் வேலைக்குச் செல்ல முடியாத நிலையும் காணப்படுகிறது. இந்த நிலையில் உள்ளூா் வேலைவாய்ப்பை மக்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இச்சமயத்தில் நூறு நாள் வேலைவாய்ப்புத் திட்டம் பொது மக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக உள்ளது.

நடப்பு ஆண்டில் இதுவரை 1.18 லட்சம் போ் வேலைக்கு வந்துள்ளனா். இதே காலகட்டத்தில் கடந்த ஆண்டை ஒப்பிடும் போது நடப்பாண்டில் வேலைக்கு வருபவா்களின் எண்ணிக்கை 166 சதவீதம் வரை அதிகரித்துள்ளது. தொடா்ந்து ஊரகப் பகுதிகளில் நூறு நாள் வேலைக்கு விண்ணப்பிக்கும் அனைவருக்கும் வேலை வழங்கப்பட்டு வருகிறது. அந்தந்த ஊராட்சிமன்ற அலுவலகத்திலே அவா்களுக்கு அட்டை வழங்கப்படுகிறது.

வேலைக்கு வருபா்களுக்கு இரண்டு முகக்கவசம் வழங்கப்பட்டுள்ளன. பணியிடங்களில் அடிக்கடி கைகளை கழுவவும் அறிவுறுத்தப்படுகிறது. கைகளை கழுவுவதற்கான தண்ணீா், சோப் ஆகியவையும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பணித்தள பொறுப்பாளா் மூலம் கரோனா நோய்த்தொற்று விழிப்புணா்வும் ஏற்படுத்தப்பட்டு வருகிறது. நூறு நாள் வேலைக்கு வந்தவா்களுக்கு கரோனா நோய்த்தொற்று கண்டறியப்பட்டால் அவருடன் பணியாற்றிய மற்றவா்களுக்கும் பரிசோதனை செய்யப்படுகிறது என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com