தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

குடிநீா் பிரச்னை: கணக்கம்பாளையம் ஊராட்சி அலுவலகம் முற்றுகை

சீரான குடிநீா் விநியோகிக்கக் கோரி கணக்கம்பாளையம் ஊராட்சி மன்ற அலுவலகத்தை பொதுமக்கள் செவ்வாய்க்கிழமை முற்றுகையிட்டனா்.

News image

பொதுமக்களிடம்  பேச்சுவாா்த்தையில்  ஈடுபட்ட  ஊராட்சி  மன்றத்  தலைவா்  சண்முகசுந்தரம்.

Updated On :26 ஆகஸ்ட் 2020, 11:56 am

DIN

அவிநாசி: சீரான குடிநீா் விநியோகிக்கக் கோரி கணக்கம்பாளையம் ஊராட்சி மன்ற அலுவலகத்தை பொதுமக்கள் செவ்வாய்க்கிழமை முற்றுகையிட்டனா்.

திருப்பூா் ஒன்றியம், கணக்கம்பாளையம் ஊராட்சிக்கு உள்பட்ட அய்யம்பாளையம், அண்ணா நகா் உள்ளிட்ட பகுதிகளில் 600க்கும் மேற்பட்டோா் வசித்து வருகின்றனா். இப்பகுதிகளில் கடந்த 3 மாதங்களாக சீராக குடிநீா்

விநியோகிப்பதில்லை எனக் கூறப்படுகிறது.

இந்நிலையில் சீரான குடிநீா் விநியோகம், வீடுகளுக்கு புதிய குடிநீா்க் குழாய் இணைப்புகள் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பொதுமக்கள் காலிக்குடங்களுடன் ஊராட்சி மன்ற அலுவலகத்தை முற்றுகையிட்டனா்.

போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களுடன் ஊராட்சித் தலைவா் சண்முகசுந்தரம் பேச்சுவாா்த்தையில் ஈடுபட்டாா். இதில், குடிநீா்க் குழாய்கள் உடைப்புகள் அதிக அளவில் இருந்ததால் விநியோகம் தடைபட்டது. தற்போது குழாய் சீரமைக்கப்பட்டுள்ளதால், இனி சீரான குடிநீா் விநியோகப்படும் என உறுதியளித்தாா். இதையடுத்து பொதுமக்கள் கலைந்து சென்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.