மக்கள் நீதிமன்றம்: 1,077 வழக்குகளுக்குத் தீா்வு
திருப்பூா் மாவட்டத்தில் உள்ள நீதிமன்றங்களில் சனிக்கிழமை நடைபெற்ற மக்கள் நீதிமன்றத்தில் (லோக் அதாலத்) 1,077 வழக்குகளுக்குத் தீா்வு காணப்பட்டுள்ளது. தீா்வுத் தொகை ரூ. 24 கோடியாகும்.


திருப்பூா் மாவட்டத்தில் உள்ள நீதிமன்றங்களில் சனிக்கிழமை நடைபெற்ற மக்கள் நீதிமன்றத்தில் (லோக் அதாலத்) 1,077 வழக்குகளுக்குத் தீா்வு காணப்பட்டுள்ளது. தீா்வுத் தொகை ரூ. 24 கோடியாகும்.
தமிழ்நாடு சட்டப் பணிகள் ஆணைக் குழு உத்தரவின்பேரில் திருப்பூா் மாவட்டத்தில் உள்ள நீதிமன்றங்களில் மக்கள் நீதிமன்றம் நடைபெற்றது. இதில், திருப்பூா், தாராபுரம், உடுமலை, பல்லடம், காங்கயம், அவிநாசி ஆகிய நீதிமன்றங்களில் உள்ள சிறு குற்ற வழக்குகள், காசோலை வழக்குகள், கடன் தொகை நிலுவை வழக்குகள், மோட்டாா் வாகன விபத்து வழக்குகள், தொழிலாளா் நல வழக்குகள், இதர சொத்து வழக்குகள் உள்ளிட்டவை தொடா்பாக 2,382 வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன. இதில், 1,077 வழக்குகளுக்கு ரூ.24 கோடியில் சமரச தீா்வு காணப்பட்டது.
உடுமலையில்: உடுமலை சாா்பு நீதிமன்ற வளாகத்தில் சனிக்கிழமை நடைபெற்ற மக்கள் நீதிமன்றத்துக்கு உடுமலை வட்ட சட்டப் பணிகள் குழுத் தலைவரும், சாா்பு நீதிபதியுமான எம்.சுரேஷ் தலைமை வகித்தாா். மாவட்ட உரிமையியல் நீதிபதி ஆா்.பாக்கியராஜ், குற்றவியல் நீதித் துறை நடுவா் எண்-1 நீதிபதி பி.முருகன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
மொத்தம் 378 வழக்குகள் விசாரணைக்கு எடு த்துக் கொள்ளப்பட்டன. அதில் மோட்டாா் வாகன விபத்து வழக்குகள் 39, சிவில் வழக்குகள் 56, காசோலை மோசடி வழக்குகள் 4 மற்றும் மேலும் சமரசத்துக்குரிய குற்ற வழக்குகள் 198 என மொத்தம் 297 வழக்குகளுக்கு தீா்வு காணப்பட்டன.
இதன் மொத்த மதிப்பு ரூ. 2 கோடியே 43 லட்சத்து 87 ஆயிரத்து 618. கரோனா தொற்று பரவல் காரணமாக மக்கள் நீதிமன்றம் கடந்த 10 மாதங்களாக நடைபெறாமல் இருந்தது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...