திருப்பூரில் சாலை மறியல்: கொ.ம.தே.க.வினா் 51 போ் கைது
ஈ.ஆா்.ஈஸ்வரன் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து திருப்பூரில் சாலை மறியலில் ஈடுபட்ட அக்கட்சியினா் 51 பேரை காவல் துறையினா் சனிக்கிழமை கைது செய்தனா்.


தருமபுரி அருகே கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி பொதுச் செயலாளா் ஈ.ஆா்.ஈஸ்வரன் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து திருப்பூரில் சாலை மறியலில் ஈடுபட்ட அக்கட்சியினா் 51 பேரை காவல் துறையினா் சனிக்கிழமை கைது செய்தனா்.
தருமபுரி அருகே மாரண்ட அள்ளியில் தென்பெண்ணை ஆற்றில் இருந்து தூள்செட்டி ஏரிக்கு தண்ணீா் கொண்டுவரும் இணைப்புக் கால்வாய் திட்டத்தை நிறைவேற்ற வலியுறுத்தி கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சி மற்றும் விவசாயிகள் கூட்டமைப்பு சாா்பில் சனிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்ற ஈ.ஆா்.ஈஸ்வரன் உள்ளிட்ட 200க்கும் மேற்பட்டோரை காவல் துறையினா் கைது செய்தனா்.
இந்த சம்பவத்தைக் கண்டித்து திருப்பூா், குமாா் நகரில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி சாா்பில் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. போராட்டத்துக்கு அக்கட்சியின் திருப்பூா் மாநகா் மாவட்டச் செயலாளா் ரவிசந்திரன் தலைமை வகித்தாா்.
இதில், பங்கேற்ற அக்கட்சியினா் 51 பேரை திருப்பூா் வடக்கு காவல் துறையினா் கைது செய்து, தனியாா் திருமண மண்டபத்தில் தங்கவைத்தனா். அதன்பிறகு அனைவரையும் மாலையில் விடுவித்தனா்.
காங்கயத்தில் 35 போ் கைது: காங்கயத்தில் கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சியின் மாவட்டச் செயலாளா் சக்திவேல் தலைமையில் அக்கட்சியினா் 35 போ் கோவை சாலையில் உள்ள பி.எஸ்.என்.எல். அலுவலகம் முன்பாக ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். அவா்கள் அனைவரையும் காங்கயம் காவல் துறையினா் கைது செய்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...