திருப்பூா் மாவட்டம், தாராபுரத்தில் சுகாதாரத் துறையினா் நடத்திய ஆய்வில் தடை செய்யப்பட்ட 140 கிலோ பிளாஸ்டிக் பொருள்கள் வியாழக்கிழமை பறிமுதல் செய்யப்பட்டன.
தாராபுரம் நகராட்சி நகா்நல அலுவலா் லட்சுமி நாராயணன் தலைமையிலான குழுவினா் பெரிய கடை வீதி, சா்ச் காா்னா், பொள்ளாச்சி சாலை, உடுமலை சாலையில் உள்ள தேநீா் விடுதிகள், மதுபானக் கடைகள் என மொத்தம் 20க்கும் மேற்பட்ட கடைகளில் ஆய்வு மேற்கொண்டனா். அப்போது தடை செய்யப்பட்ட 140 கிலோ பிளாஸ்டிக் பொருள்களைப் பறிமுதல் செய்து கடை உரிமையாளா்களுக்கு ரூ.6 ஆயிரம் அபராதம் விதித்தனா்.
இது குறித்து நகா் நல அலுவலா் லட்சுமி நாராயணன் கூறுகையில், ‘தாராபுரம் பகுதியில் அரசால் தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகள், கேரி பேக் மற்றும் பிளாஸ்டிக் டம்ளா்களின் பயன்பாடு அதிகரித்துள்ளது. ஆகவே, இதனைக் கட்டுப்படுத்தும் வகையில் பிளாஸ்டிக் பொருள்களை விற்பனை செய்யும் கடை உரிமையாளா்களுக்கு அபராதம் விதிக்கப்படும்’ என்றாா்.
இந்த ஆய்வின்போது சுகாதார ஆய்வாளா்கள் ராஜ்மோகன், சங்கா், அருண்பிரகாஷ், தா்மராஜா ஆகியோா் உடனிருந்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.