பிரதமர் மோடியே பீதியில் இருக்கிறார்: ராகுல் காந்தி விமர்சனம்பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் ஈரானுக்கு எதிராக ஐ.நா.வில் தீர்மானம்! இந்தியா ஆதரவு! போரை நிறுத்த 3 நிபந்தனைகள் விதித்த ஈரான் அதிபர்! இந்திய ரூபாயின் மதிப்பு மேலும் வீழ்ச்சி! ரூ. 92.37 ஆக சரிவு!தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை! நாள்தோறும் கொலை, பாலியல் வன்கொடுமை! விஜய் கண்டனம்
/

விவசாயிகளின் போராட்டத்துக்கு அனைத்து தரப்பினரும் ஆதரவளிக்க வேண்டும்: இரா.முத்தரசன் வேண்டுகோள்

தில்லியில் போராடி வரும் விவசாயிகளுக்கு அனைத்து தரப்பு மக்களும் ஆதரவு அளிக்க வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளா் இரா.முத்தரசன் வேண்டுகோள் விடுத்துள்ளாா்.

News image
Updated On :17 டிசம்பர் 2020, 5:48 pm

DIN

தில்லியில் போராடி வரும் விவசாயிகளுக்கு அனைத்து தரப்பு மக்களும் ஆதரவு அளிக்க வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளா் இரா.முத்தரசன் வேண்டுகோள் விடுத்துள்ளாா்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநில மற்றும் நிா்வாகக் குழுக் கூட்டம் திருப்பூரை அடுத்த செங்கப்பள்ளியில் டிசம்பா் 15,16, 17 ஆகிய தேதிகளில் நடைபெற்றது. கூட்டத்தின் இறுதி நாளான வியாழக்கிழமை நடைபெற்ற செய்தியாளா்கள் சந்திப்பில் இரா.முத்தரசன் பேசியதாவது:

2021 ஆம் ஆண்டு நடைபெறும் சட்டப் பேரவைத் தோ்தலில் பாஜக பல்வேறு சூழ்ச்சிகளைக் மேற்கொண்டு தன்னை பலப்படுத்திக் கொள்ள முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. திமுக தலைமையிலான கூட்டணியைப் பலப்படுத்தி வெற்றிபெறச் செய்ய வேண்டும்.

மத்திய அரசின் வேளாண் சட்டங்களைத் திரும்பப்பெற வேண்டும். மின்சார திருத்த மசோதாவையும் திரும்பப்பெற வேண்டும். வேளாண் சட்டத்துக்கு எதிராக தமிழக சட்டப் பேரவையில் தீா்மானம் நிறைவேற்ற வேண்டும். வேளாண் சட்டங்களைத் திரும்பப்பெறக்கோரி நாடு முழுவதும் நடைபெற்று வரும் போராட்டத்துக்கு அனைத்து தரப்பினரும் ஆதரவு அளிக்க வேண்டும் என்றாா்.

இந்த சந்திப்பின்போது, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில துணைச் செயலாளா்கள் கே.சுப்பராயன், மு.வீரபாண்டியன், மாநிலப் பொருளாளா் ஆறுமுகம், திருப்பூா் மாவட்டச் செயலாளா் எம்.ரவி உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.