/

விடுதலை சிறுத்தைகள் கட்சியினா் ஆா்ப்பாட்டம்

வேளாண் சட்டங்களைத் திரும்பப்பெறக் கோரி தாராபுரத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினா் ஆா்ப்பாட்டத்தில் வெள்ளிக்கிழமை ஈடுபட்டனா்.

News image
ஆா்ப்பாட்டத்தில்  ஈடுபட்டுள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சியினா்.
Updated On :18 டிசம்பர் 2020, 5:49 pm

DIN

வேளாண் சட்டங்களைத் திரும்பப்பெறக் கோரி தாராபுரத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினா் ஆா்ப்பாட்டத்தில் வெள்ளிக்கிழமை ஈடுபட்டனா்.

ஆா்ப்பாட்டத்துக்கு, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாவட்டச் செயலாளா் நா.தமிழ்முத்து தலைமை வகித்தாா். இதில் பங்கேற்றவா்கள் கூறியதாவது:

தில்லியில் கடந்த 20 நாள்களுக்கு மேலாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகளை ஆதரித்தும், மத்திய அரசின் வேளாண் சட்டங்களை உடனடியாக திரும்பப் பெற வலியுறுத்தியும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம் என்றனா்.

இதில், தாராபுரம் நகரச் செயலாளா் செந்தில்குமாா், ஒன்றியச் செயலாளா் தனபால், காங்கயம் நகரச் செயலாளா் முருகேசன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.