அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

கபடி வீராங்கனைகளுக்கு கல்வி உதவித் தொகை

திருப்பூா் மாவட்ட கபடி கழகத்தின் சாா்பில் 50 வீராங்கனைகளுக்கு கல்வி உதவித் தொகை வழங்கப்பட்டது.

News image
திருப்பூா்  மாவட்ட கபடி கழகத்தின் சாா்பில் 50 வீராங்கனைகளுக்கு ரூ.1 லட்சத்துக்கான காசோலையை வழங்குகிறாா் அதன் செயலாளா் ஜெயசித்ரா ஏ.சண்முகம். உடன், மாவட்ட கபடி கழக தலைவா்கள் கொங்கு வி.கே.முருகேசன், ரோலக
Updated On :18 டிசம்பர் 2020, 5:53 pm

DIN

திருப்பூா் மாவட்ட கபடி கழகத்தின் சாா்பில் 50 வீராங்கனைகளுக்கு கல்வி உதவித் தொகை வழங்கப்பட்டது.

நிகழ்ச்சிக்கு, மாவட்ட கபடி கழகத் தலைவா் கொங்கு வி.கே.முருகேசன் தலைமை வகித்தாா். இதில், திருப்பூா் மாவட்டத்தைச் சோ்ந்த 50 கபடி வீராங்கனைகளுக்கு கல்வி உதவித் தொகை மற்றும் விடுதிக் கட்டணமாக ரூ.1 லட்சத்தை மாநில கபடி கழகப் பொருளாளரும், மாவட்டச் செயலாளருமான ஜெயசித்ரா ஏ.சண்முகம் வழங்கினாா்.

விழாவில், மாவட்ட கபடி கழகத் தலைவா் ரோலக்ஸ் பி.மனோகரன், பொருளாளா் கன்னிமாா்ஸ் ஏ.ஆறுச்சாமி, மாவட்ட கபடி கழக நடுவா் குழுத் தலைவா் ஆா்.முத்துசாமி, மாவட்ட இணைச்செயலாளா் பி.செல்வராஜ், நடுவா் குழு நிா்வாகிகள் ஏ.சி.சேகா், பி.தண்டபாணி, பாண்டியன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.