லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!கார்த்தி சிதம்பரம் எம்பி அலுவலகம் மீது பெட்ரோல் குண்டுவீச்சு! ஹோர்முஸ் நீரிணையில் கண்ணிவெடி பதிக்கும் 16 ஈரான் கப்பல்களை அழித்த அமெரிக்கா! தமிழ்நாட்டில் இருந்து புறப்பட்டார் ஆளுநர் ஆர்.என். ரவி! மேற்கு வங்க ஆளுநராக ஆர்.என்.ரவி நாளை பதவியேற்பு!நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்!தமிழ்நாட்டில் மீண்டும் 'அம்மா' ஆட்சி: பியூஷ் கோயல்அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

சேவூரில் குற்றங்களைத் தடுக்க 16 இடங்களில் சிசிடிவி கேமராக்கள்

சேவூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் குற்றச் சம்பவங்களை தடுக்கும் வகையில் முதற்கட்டமாக 16 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு சனிக்கிழமை முதல் பயன்பாடிற்கு திறக்கப்பட்டன.

News image
நிகழ்ச்சியில் பங்கேற்ற காவல் துணை கண்காணிப்பாளர் எல். பாஸ்கர் ,அவிநாசி ஒன்றியக்குழு தலைவர் ஜெகதீசன் ஊராட்சி மன்ற தலைவர்கள் சேவூர் ஜி.வேலுசாமி, ப.ரவிக்குமார், காவல் உதவி ஆய்வாளர் அன்பரசு உள்ளிட்டோர்.
Updated On :19 டிசம்பர் 2020, 1:18 pm

DIN

சேவூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் குற்றச் சம்பவங்களை தடுக்கும் வகையில் முதற்கட்டமாக 16 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு சனிக்கிழமை முதல் பயன்பாடிற்கு திறக்கப்பட்டன.
திருப்பூர் மாவட்டம், சேவூர் காவல் நிலையத்திற்கு உள்பட்ட பகுதிகளில் குற்றச்சம்பவங்களைத் தடுக்கும் வகையில் பொதுமக்கள், வணிக நிறுவனத்தினர், சேவூர் ரோட்டரி சங்கத்தினர் உள்ளிட்டோர் பங்களிப்புடன் சிசிடிவி கேமரா பொருத்தும் பணி நடைபெற்றது. 
இதில் முதற்கட்டமாக சேவூர் காவல் நிலைய பேருந்து நிறுத்தம், வடக்கு வீதி, கைகாட்டி ரவுண்டானா, கோபி சாலை, புளியம்பட்டி சாலை, அவிநாசி சாலை, கூட்டுறவு வங்கி நான்கு முனை சந்திப்பு சாலை உள்ளிட்ட இடங்களில் ரூ.5 லட்சம் மதிப்பில் 16 சிசிடிவி கேமராங்கள் பொருத்தப்பட்டது. இதையடுத்து, பயன்பாட்டிற்கு ஒப்படைக்கும் நிகழ்ச்சி சேவூர் காவல் நிலைய வளாகத்தில் நடைபெற்றது. 
நிகழ்ச்சிக்கு அவிநாசி காவல் துணைக் கண்காணிப்பாளர் எல்.பாஸ்கர் தலைமை வகித்தார். அவிநாசி ஒன்றிய குழுத் தலைவர் அ.ஜெகதீசன், ஊராட்சி மன்ற தலைவர்கள் சேவூர் ஜி.வேலுசாமி ஆகியோர் சிசிடிவி கேமராக்களை பயன்பாட்டிற்கு திறந்து வைத்து, நன்கொடையாளர்களை கௌரவித்தார். 
மேலும் சேவூர் காவல் எல்லை ஆலத்தூர் சோதனை சாவடியில் பொருத்துவதற்காக, ரோட்டரி சங்கத்தினர் 4 சிசிடிவி கேமராக்கள் மற்றும் உபகரணங்களை வழங்கினர். முறியாண்டம்பாளையம் ஊராட்சி மன்றத் தலைவர் ப.ரவிக்குமார்,
உதவி ஆய்வாளர்கள் அன்பரசு, செல்வராஜ், தனிப்பிரிவு காவலர் வெள்ளியங்கிரி, ரோட்டரி சங்க நிர்வாகிகள் முத்துச்சாமி, நாகராஜ், ரத்தினம், பைஜர்ரகுமான், பொதுமக்கள், வணிக நிறுவனத்தினர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.