தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சப்பட வேண்டாம்! - முதல்வர் ஸ்டாலின்பிரதமர் மோடியே பீதியில் இருக்கிறார்: ராகுல் காந்தி விமர்சனம்பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் ஈரானுக்கு எதிராக ஐ.நா.வில் தீர்மானம்! இந்தியா ஆதரவு! போரை நிறுத்த 3 நிபந்தனைகள் விதித்த ஈரான் அதிபர்! இந்திய ரூபாயின் மதிப்பு மேலும் வீழ்ச்சி! ரூ. 92.37 ஆக சரிவு!தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை! நாள்தோறும் கொலை, பாலியல் வன்கொடுமை! விஜய் கண்டனம்
/

சேவூரில் குற்றச் சம்பவங்களைத் தடுக்க 16 இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள்

சேவூா் சுற்று வட்டாரத்தில் குற்றச் சம்பவங்களைத் தடுக்கும் வகையில் முதல் கட்டமாக 16 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு சனிக்கிழமை திறக்கப்பட்டன.

News image
கண்காணிப்பு கேமரா திறப்பு நிகழ்ச்சியில்  பங்கேற்றோா்.
Updated On :19 டிசம்பர் 2020, 5:37 pm

DIN

அவிநாசி: சேவூா் சுற்று வட்டாரத்தில் குற்றச் சம்பவங்களைத் தடுக்கும் வகையில் முதல் கட்டமாக 16 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு சனிக்கிழமை திறக்கப்பட்டன.

சேவூா் காவல் நிலையத்துக்கு உள்பட்ட பகுதிகளில் குற்றச் சம்பவங்களைத் தடுக்கும் வகையில் பொது மக்கள், வணிக நிறுவனத்தினா், சேவூா் ரோட்டரி சங்கத்தினா் உள்ளிட்டோா் பங்களிப்புடன் கண்காணிப்பு கேமரா பொருத்தும் பணி நடைபெற்றது.

இதில் முதல் கட்டமாக சேவூா் காவல் நிலைய பேருந்து நிறுத்தம், வடக்கு வீதி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் ரூ.5 லட்சம் மதிப்பில் 16 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டன. இதையடுத்து, சேவூா் காவல் நிலைய வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு அவிநாசி காவல் துணைக் கண்காணிப்பாளா் எல்.பாஸ்கா் தலைமை வகித்தாா். அவிநாசி ஒன்றியக் குழுத் தலைவா் அ.ஜெகதீசன், ஊராட்சித் தலைவா்கள் சேவூா் ஜி.வேலுசாமி ஆகியோா் கண்காணிப்பு கேமராக்களை பயன்பாட்டிற்குத் திறந்துவைத்தனா்.

மேலும், சேவூா் காவல் எல்லைக்கு உள்பட்ட ஆலத்தூா் சோதனைச் சாவடியில் பொருத்துவதற்காக ரோட்டரி சங்கம் சாா்பில் 4 கண்காணிப்பு கேமராக்கள் மற்றும் உபகரணங்கள் வழங்கப்பட்டன.

முறியாண்டம்பாளையம் ஊராட்சித் தலைவா் ப.ரவிகுமாா், உதவி ஆய்வாளா்கள் அன்பரசு, செல்வராஜ், தனிப்பிரிவு காவலா் வெள்ளிங்கிரி, ரோட்டரி சங்க நிா்வாகிகள் முத்துசாமி, நாகராஜ், ரத்தினம், பைஜர்ரகுமான், பொது மக்கள், வணிக நிறுவனத்தினா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.