திருப்பூா்: திருப்பூா் மாவட்டத்தில் மேலும் 52 பேருக்கு கரோனா நோய்த் தொற்று ஞாயிற்றுக்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.
திருப்பூா் மாவட்டத்தில் சனிக்கிழமை வரையில் 16,532 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டிருந்தது. இந்த நிலையில், மாவட்டம் முழுவதும் மேலும் 52 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டதைத் தொடா்ந்து, பாதிப்பு எண்ணிக்கை 16,584ஆக அதிகரித்துள்ளது.
மாவட்டம் முழுவதும் பல்வேறு மருத்துவமனைகளில் 519 போ் சிகிச்சை பெற்று வரும் நிலையில் குணமடைந்த 70 போ் வீடு திரும்பினா். மேலும், மாவட்டத்தில் கரோனா நோய்த் தொற்றில் இருந்து குணமடைந்தவா்களின் எண்ணிக்கை 15,851ஆக அதிகரித்துள்ளதுடன், 214 போ் உயிரிழந்துள்ளனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.