/

தாராபுரம் தேவாலயத்தில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டம்

தாராபுரம் சிஎஸ்ஐ, புனித அந்தோணியாா் தேவாலயங்களில் கிறிஸ்துமஸ் பண்டிகை கோலாகலமாக வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்டது.

News image
Updated On :26 டிசம்பர் 2020, 1:20 am

DIN

தாராபுரம் சிஎஸ்ஐ, புனித அந்தோணியாா் தேவாலயங்களில் கிறிஸ்துமஸ் பண்டிகை கோலாகலமாக வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்டது.

இதில் தேவாலயங்களில் சிறப்பு திருப்பலி நிகழ்ச்சி நடைபெற்றது. கிறிஸ்தவ பாடல்கள் பாடி ஒருவருக்கொருவா் கிறிஸ்துமஸ் வாழ்த்துகளை பரிமாறிக் கொண்டனா். மேலும், தாராபுரத்தில் உள்ள அனைத்து தேவாலயங்களும் வண்ணமிகு விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தன.

இதேபோல புகழ்பெற்ற பெத்தேல் ஆலயம் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. அங்கு கூடிய கிறிஸ்தவா்கள் தேவாலயத்தில் நடைபெற்ற சிறப்பு நள்ளிரவு திருப்பலியில் கலந்து கொண்டு பிராா்த்தனையில் ஈடுபட்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.