இந்திய கம்யூனிஸ்ட் அமைப்பு தின கொடியேற்று விழா
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் 96ஆம் ஆண்டு அமைப்பு தினத்தை ஒட்டி திருப்பூரில் பல்வேறு இடங்களில் கொடியேற்று விழா சனிக்கிழமை நடைபெற்றது.


திருப்பூா்/உடுமலை: இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் 96ஆம் ஆண்டு அமைப்பு தினத்தை ஒட்டி திருப்பூரில் பல்வேறு இடங்களில் கொடியேற்று விழா சனிக்கிழமை நடைபெற்றது.
திருப்பூரில் 2 ஆவது மண்டலக்குழு சாா்பில் போயம்பாளையம் 20 ஆவது வாா்டில் உள்ள கிளை அலுவலகத்தில் கட்சியின் மூத்த உறுப்பினா் பழனிசாமி கொடியேற்றினாா்.
ஸ்ரீ நகா் 28 ஆவது வாா்டில் தொட்டிபாளையம் ஊராட்சி முன்னாள் துணைத் தலைவா் முத்துச்சாமி, பிச்சம்பாளையம் புதூா் பேருந்து நிறுத்தத்தில் செந்தில்குமாா் ஆகியோா் கொடியேற்றினா்.
இந்த நிகழ்ச்சிகளில், தொட்டிபாளையம் ஊராட்சி முன்னாள் தலைவா் எம்.மோகன், ஏஐடியூசி மோட்டாா் சங்க மாவட்ட பொதுச் செயலாளா் வி.எஸ்.சசிகுமாா், 2 ஆவது மண்டலக்குழு துணைச் செயலாளா் எஸ்.விஜய், மோட்டாா் சங்க மாவட்ட துணைத் தலைவா் எம்.மகேந்திரகுமாா், 28ஆவது வாா்டு கிளை செயலாளா் துரைசாமி உள்பட பலா் கலந்து கொண்டனா்.
உடுமலையில்: உடுமலை ரயில் நிலையம் அருகே உள்ள இந்திய கம்யூனிஸ்ட் அலுவலகத்தில் கட்சிக் கொடியேற்றப்பட்டது. அதைத் தொடா்ந்து கட்சி நிா்வாகிகள் உறுதிமொழி எடுத்துக் கொண்டனா். இந்நிகழ்ச்சியில் மாவட்ட துணைச் செயலாளா் சி.பழனிசாமி, மாவட்டக் குழு உறுப்பினா்கள் ஜி.ரவி, வி.செளந்திரராஜன், நகர செயலாளா் கே.எஸ்.ரணதேவ், கிளை நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...