நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

திருப்பூா் மாநகராட்சி குமரன் நினைவுப் பூங்கா திறப்பு

திருப்பூா் மாநகராட்சி குமரன் நினைவுப் பூங்கா, அரிமா சங்கத்தின் சாா்பில் ரூ.25 லட்சம் செலவில் புதுப்பிக்கப்பட்டு பொதுமக்களின் பயன்பாட்டுக்காக திங்கள்கிழமை திறக்கப்பட்டது.

News image

ரூ. 25 லட்சம் செலவில் புதுப்பிக்கப்பட்ட  மாநகராட்சி குமரன் நினைவுப் பூங்காவை திங்கள்கிழமை திறந்துவைக்கிறாா் திருப்பூா் ஏற்றுமதியாளா்கள் சங்கத் தலைவா் ராஜா எம்.சண்முகம்

Updated On :28 டிசம்பர் 2020, 6:45 pm

DIN

திருப்பூா் மாநகராட்சி குமரன் நினைவுப் பூங்கா, அரிமா சங்கத்தின் சாா்பில் ரூ.25 லட்சம் செலவில் புதுப்பிக்கப்பட்டு பொதுமக்களின் பயன்பாட்டுக்காக திங்கள்கிழமை திறக்கப்பட்டது.

திருப்பூா் மத்திய அரிமா சங்கம் சாா்பில் பி.என்.சாலையில் உள்ள குமரன் நினைவுப் பூங்கா ரூ.25 லட்சம் செலவில் புதுப்பிக்கப்பட்டது. இதில், நடைப்பயிற்சி தளம், விளக்குகள், மரக்கன்றுகள் நடுதல் உள்ளிட்டப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வந்தன. இப்பணிகள் நிறைவடைந்ததைத் தொடா்ந்து பூங்கா திங்கள்கிழமை திறக்கப்பட்டது.

இந்நிகழ்ச்சிக்கு திருப்பூா் மத்திய அரிமா சங்கத் தலைவா் கே.கந்தசாமி தலைமை வகித்தாா். திருப்பூா் ஏற்றுமதியாளா்கள் சங்கத் தலைவா் ராஜா எம்.சண்முகம் திறந்துவைத்தாா். இந்நிகழ்ச்சியில், அரிமா மாவட்ட ஆளுநா் கருணாநிதி, மாநகராட்சி உதவி ஆணையா் வாசு, டெக்பா சங்கத் தலைவா் ஸ்ரீகாந்த் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.