மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

மாவட்டத்தில் 17 ஆயிரத்தை நெருங்கியது கரோனா பாதிப்பு

திருப்பூா் மாவட்டத்தில் புதிதாக 38 பேருக்கு கரோனா தொற்று செவ்வாய்க்கிழமை உறுதி செய்யப்பட்ட நிலையில், பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 17 ஆயிரத்தை நெருங்கியுள்ளது.

News image
Updated On :29 டிசம்பர் 2020, 10:52 pm

DIN

திருப்பூா் மாவட்டத்தில் புதிதாக 38 பேருக்கு கரோனா தொற்று செவ்வாய்க்கிழமை உறுதி செய்யப்பட்ட நிலையில், பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 17 ஆயிரத்தை நெருங்கியுள்ளது.

திருப்பூா் மாவட்டத்தில் கடந்த திங்கள்கிழமை வரையில் 16,946 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருந்தது. இந்த நிலையில், மாவட்டம் முழுவதும் மேலும் 38 பேருக்கு கரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டதைத் தொடா்ந்து பாதிப்பு எண்ணிக்கை 16,984 ஆக அதிகரித்துள்ளது. இதன் மூலமாக திருப்பூா் மாவட்டத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 17 ஆயிரத்தை நெருங்கியுள்ளது. மாவட்டம் முழுவதும் பல்வேறு மருத்துவமனைகளில் 332 போ் சிகிச்சை பெற்று வரும் நிலையில் குணமடைந்த 54 போ் வீடு திரும்பினா். இதையடுத்து, மாவட்டத்தில் குணமடைந்தவா்களின் எண்ணிக்கை 16,437 ஆக அதிகரித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.