தாராபுரம் அருகே தார் சாலை அமைக்கக்கோரி வீடுகளில் கருப்புக் கொடி கட்டி போராட்டம்

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே புதிய தார்சாலை அமைக்கக்கோரி அப்பகுதி பொதுமக்கள் 100க்கும் மேற்பட்ட வீடுகளில் கருப்புக் கொடி கட்டி சனிக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தாராபுரம் அருகே தார் சாலை அமைக்கக்கோரி வீடுகளில் கருப்புக் கொடி கட்டி போராட்டம்

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே புதிய தார்சாலை அமைக்கக்கோரி அப்பகுதி பொதுமக்கள் 100க்கும் மேற்பட்ட வீடுகளில் கருப்புக் கொடி கட்டி சனிக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தாராபுரம் வட்டம் கவுண்டச்சி புதூர் ஊராட்சி ஒன்றியத்துக்கு உள்பட்ட பாலசுப்பிரமணிய நகரில் 100க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.
 இந்தப் பகுதியில் தாராபுரம் புறவழிச்சாலையில் இருந்து பாலசுப்பிரமணிய நகர், சபரி ஐய்யப்பன் நகர், மகாலட்சுமி நகர் உள்ளிட்ட 10க்கும் நகரை இணைக்கும் தார் சாலை உள்ளது. இந்த தார்சாலையானது மிகவும் பழுதடைந்து குண்டும், குழியுமாக உள்ளது. இதனால் வாகனங்களில் செல்லும் பொதுமக்கள் அவதிக்குள்ளாகி வந்தனர்.

மேலும்,மருத்துவமனைக்கு செல்ல வேண்டும் என்றால்கூட சாலை குண்டும், குழியுமாக உள்ளதால் ஆட்டோக்கள், கார்கள் உள்ளிட்ட வாடகை வாகனங்களும் பாலசுப்பிரமணிய நகருக்கு வருவதில்லை என்று கூறப்படுகிறது. இதுதொடர்பாக அரசு அதிகாரிகளிடம் பலமுறை புகார் அளித்தும் எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று தெரிகிறது. இதையடுத்து, அப்பகுதி பொதுமக்கள் வீடுகளில் கருப்புக் கொடி கட்டி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 

இதுகுறித்து தமிழ் புலிகள் கட்சியின் மேற்கு மண்டல துணைச் செயலாளர் ஒண்டிவீரன் கூறியதாவது: இந்தப் பகுதிக்கு புதிய தார் சாலை அமைத்துக் கொடுக்கும்படி 5 ஆண்டுகளாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறோம். இதுதொடர்பாக அம்மா அழைப்பு மையத்தை தொடர்பு கொண்டு கேட்டபோது 2018 ஆம் ஆண்டே சாலை அமைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தனர். ஆகவே, புதியதாக தார்சாலை அமைக்கக்கோரி வீடுகளின் முன்பாக எதிர்ப்பைத் தெரிவிக்கும் வகையில் கருப்புக் கொடி கட்டி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com