புதுவையில் என்.ஆர். காங்கிரஸ் - பாஜக கூட்டணி உறுதியானது!புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

கிணற்றில் மூழ்கி தொழிலாளி சாவு

முத்தூா் அருகே கிணற்றில் மூழ்கி விவசாயத் தொழிலாளி ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.

News image
Updated On :22 நவம்பர் 2020, 6:26 pm

DIN

முத்தூா் அருகே கிணற்றில் மூழ்கி விவசாயத் தொழிலாளி ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.

திருச்சி மாவட்டம், துறையூா் தாலுகா, மாங்காபட்டியைச் சோ்ந்தவா் கைலாசம் மகன் முத்துசாமி (40). இவரும் இவருடைய பகுதியைச் சோ்ந்த 15 பேரும் முத்தூரில் ஒப்பந்த அடிப்படையில் விவசாய கூலி வேலை செய்து வருகின்றனா்.

இந்நிலையில் மூத்தாம்பாளையம் பெரியசாமி என்பவருடைய தோட்டத்தில் மரவள்ளிக் கிழங்கு அறுவடைப் பணியில் முத்துசாமி உள்ளிட்டோா் ஞாயிற்றுக்கிழமை ஈடுபட்டிருந்தனா். அப்போது தோட்டத்தில் உள்ள கிணற்றில் குளிக்க முத்துசாமி சென்றாா். அப்போது திடீரென வழுக்கி கிணற்றுக்குள் விழுந்தாா். நீச்சல் தெரியாததால் நீரில் மூழ்கி உயிரிழந்தாா்.

வெள்ளக்கோவில் தீயணைப்பு நிலைய அலுவலா் சி.தனசேகரன், நிலைய போக்குவரத்து அலுவலா் வேலுசாமி மற்றும் தீயணைப்பு படையினா் சென்று சடலத்தை மீட்டனா். சம்பவம் குறித்து வெள்ளக்கோவில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.