47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

திருப்பூர், தாராபுரத்தில் பரவலாக மழை

திருப்பூர், தாராபுரத்தின் பல்வேறு பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை பரவலாக மழை பெய்தது.

News image
தாராபுரம் பூக்கடை கார்னர் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை மாலை பெய்த மழையால் சாலைகளில் தேங்கிய மழை நீரில் ஊர்ந்து செல்லும் இருசக்கர வாகனங்கள்.
Updated On :6 செப்டம்பர் 2020, 2:26 pm

DIN

திருப்பூர், தாராபுரத்தின் பல்வேறு பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை பரவலாக மழை பெய்தது.

திருப்பூர் மாநகரின் பல்வேறு பகுதிகளில் காலை முதலே வானம் சற்று மேக மூட்டத்துடன் காணப்பட்டது. இந்த நிலையில், மாநகரின் பல்வேறு பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை மாலை 4 மணி அளவில் பரவலாக மழை பெய்யத் தொடங்கியது. 

இதில், திருப்பூர் பழைய பேருந்து நிலையம், ரயில் நிலையம், புஷ்பா ரவுண்டானா, புதிய பேருந்து நிலையம், ஊத்துக்குளி சாலை, மங்கலம் சாலை, காங்கயம் சாலை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை 7 மணி வரையில் மழை பெய்து வருகிறது. இந்த மழையால் ஊத்துக்குளி ரயில்வே பாலம், புஷ்பா ரவுண்டானா உள்ளிட்ட பகுதிகளில் சாலைகளில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியதால் அந்த வழியாகச் சென்ற வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகினர்.

தாராபுரத்தில்....அதே போல தாராபுரத்தின் பல்வேறு பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை மாலை 4 மணி அளவில் தொடங்கிய மழையானது மாலை 6 மணி வரையில் 2 மணி நேரம் நீடித்தது. இந்தமழை காரணமாக தாராபுரம் பெரிய கடை வீதி, பூக்கடை கார்னர், சின்னகடை வீதி, அரசமரம் உள்ளிட்ட தாழ்வான பகுதிகளில் மழைநீர் சாலைகளில் பெருக்கெடுத்து ஓடியது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.