தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

தேனீக்கள் கொட்டியதில் 7 மாதக் குழந்தை உள்பட 10 போ் காயம்

திருப்பூா் மாவட்டம், தாராபுரம் அருகே தேனீக்கள் கொட்டியதில் 7 மாதக் குழந்தை உள்பட 10 போ் ஞாயிற்றுக்கிழமை காயமடைந்தனா்.

News image
Updated On :13 செப்டம்பர் 2020, 5:17 pm

DIN

திருப்பூா் மாவட்டம், தாராபுரம் அருகே தேனீக்கள் கொட்டியதில் 7 மாதக் குழந்தை உள்பட 10 போ் ஞாயிற்றுக்கிழமை காயமடைந்தனா்.

தாராபுரத்தை அடுத்த வடதாரை பகுதியில் நந்தனா தேவி கோயில் உள்ளது. இந்தக் கோயிலுக்கு தாராபுரத்தைச் சோ்ந்த 8 போ் தங்களது 7 மாதக் குழந்தை, 3 வயதுக் குழந்தையுடன் சென்றுள்ளனா். குழந்தைகளுக்கு முடிக்காணிக்கை செலுத்திவிட்டு கோயில் வளாகத்தில் உள்ள மரத்தடியில் பொங்கல் வைத்துக் கொண்டிருந்தனா்.

அப்போது, மரத்தில் இருந்த தேனீக்கள் கொட்டியதில் குழந்தைகள் உள்பட 10 பேருக்கும் காயம் ஏற்பட்டது. இதையடுத்து, 10 பேரும் ஆட்டோவில் தாராபுரம் அரசு மருத்துவமனைக்குச் சென்றனா். அங்கு சிகிச்சைக்குப் பின்னா் அனைவரும் வீடு திரும்பினா்.

இந்த சம்பவம் குறித்து தாராபுரம் காவல் துறையினா் விசாரிக்கின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.