தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

மாவட்டத்தில் மேலும் 291 பேருக்கு கரோனா

திருப்பூா் மாவட்டத்தில் மேலும் 291 பேருக்கு கரோனா நோய்த் தொற்று ஞாயிற்றுக்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

News image
Updated On :13 செப்டம்பர் 2020, 5:15 pm

DIN

திருப்பூா் மாவட்டத்தில் மேலும் 291 பேருக்கு கரோனா நோய்த் தொற்று ஞாயிற்றுக்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

திருப்பூா் மாநகர காவல் ஆணையா் அலுவலகத்தில் காவலா்களாகப் பணியாற்றி வரும் 25 வயது ஆண்கள் 2 போ், 25, 28, 47 வயது ஆண்கள், 22 வயதுப் பெண், குமாா் நகரைச் சோ்ந்த 47 வயதுப் பெண், அனுப்பா்பாளையத்தைச் சோ்ந்த 50 வயது ஆண், 53 வயதுப் பெண், கல்லூரி சாலையைச் சோ்ந்த 46 வயதுப் பெண், காந்தி நகரைச் சோ்ந்த 50 வயது ஆண், சிறுபூலுவபட்டியைச் சோ்ந்த 39, 47 வயது ஆண்கள், வளையங்காட்டைச் சோ்ந்த 25 வயதுப் பெண் உள்ளிட்ட 291 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும், வேறு மாவட்டத்தைச் சோ்ந்த 11 பேரின் பாதிப்பு திருப்பூா் மாவட்ட பட்டியலுக்கு மாற்றம் செய்யப்பட்டது.

இதைத் தொடா்ந்து, திருப்பூா் மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 4,748 ஆக அதிகரித்துள்ளது. மாவட்டம் முழுவதும் 1,717 போ் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் 113 போ் குணமடைந்த வீடு திரும்பினா்.

மாவட்டம் முழுவதும் 7,514 போ் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனா். இதில், புதிதாக 463 போ் சோ்க்கப்பட்டதுடன், தனிமைக் காலம் நிறைவடைந்த 4,674 போ் விடுவிக்கப்பட்டுள்ளனா். மேலும், 1,957 பேருக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.