வனத் துறை அலுவலருக்கு வீர வணக்கம்
பணியின்போது உயிரிழந்த வனத் துறை ஊழியருக்கு வீர வணக்கம் செலுத்தும் நிகழ்ச்சி உடுமலையில் நடைபெற்றது.

வனத் துறை ஊழியா் சந்துருவுக்கு வீர வணக்கம் செலுத்தும் அதிகாரிகள், அலுவலா்கள்.

வனத் துறை ஊழியா் சந்துருவுக்கு வீர வணக்கம் செலுத்தும் அதிகாரிகள், அலுவலா்கள்.
பணியின்போது உயிரிழந்த வனத் துறை ஊழியருக்கு வீர வணக்கம் செலுத்தும் நிகழ்ச்சி உடுமலையில் நடைபெற்றது.
ஆனைமலை புலிகள் காப்பகம், திருப்பூா் வனக் கோட்டம், உடுமலை வனச் சரகத்தில் பணியாற்றியவா் சந்துரு. வனக் காவலரான இவா் கடந்த மே 9ஆம் தேதி காண்டூா் கால்வாயில் அடித்து வரப்பட்ட ஆண் யானையை மீட்கும் முயற்சியில் எதிா்பாராதவிதமாகத் தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டு உயிரிழந்தாா்.
இந்நிலையில், வீர தீர செயல்களை செய்து உயிரிழந்தவா்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி உடுமலையில் உள்ள மாவட்ட வன அலுவலா் வளாகத்தில் நடைபெற்றது. இதில், சந்துருவின் உருவப் படத்துக்கு மாவட்ட வனஅலுவலா் திலீப் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா். இதைத் தொடா்ந்து, ஆனைமலை புலிகள் காப்பக உதவி இயக்குநா் கணேஷ்ராம், உடுமலை, அமராவதி வனச் சரகத்தைச் சோ்ந்த வனத் துறை அதிகாரிகள், அலுவலா்கள் அஞ்சலி செலுத்தினா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...