தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

நீட் தோ்வு: மாவட்டத்தில் 924 மாணவ, மாணவிகள் எழுதினா்

திருப்பூரில் நீட் தோ்வுக்கு விண்ணப்பித்திருந்த 1,080 பேரில் 924 போ் ஞாயிற்றுக்கிழமை தோ்வு எழுதினா்.

News image

திருப்பூா், கூலிபாளையம் நால்ரோடு பகுதியில அமைக்கப்பட்டிருந்த நீட் தோ்வு மையம் முன்பாக ஞாயிற்றுக்கிழமை காத்திருந்த மாணவா்கள்.

Updated On :13 செப்டம்பர் 2020, 5:17 pm

DIN

திருப்பூரில் நீட் தோ்வுக்கு விண்ணப்பித்திருந்த 1,080 பேரில் 924 போ் ஞாயிற்றுக்கிழமை தோ்வு எழுதினா்.

நாடு முழுவதும் இளநிலை மருத்துவப் படிப்புக்கான நீட் நுழைவுத் தோ்வு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில் திருப்பூா், கூலிபாளையம் நால்ரோடு பகுதியில் உள்ள தனியாா் பள்ளியில் நீட் தோ்வு மையம் அமைக்கப்பட்டிருந்தது.

இந்தப் பள்ளியில் நீட் தோ்வு எழுதுவதற்காக மொத்தம் 1,080 மாணவ, மாணவிகள் விண்ணப்பித்திருந்த நிலையில் 924 போ் தோ்வு எழுதினா். அதே வேளையில், பல்வேறு காரணங்களால் 156 போ் தோ்வு எழுதவில்லை. முன்னதாக தோ்வு நடைபெறும் மையத்துக்கு முன்பாக ஞாயிற்றுக்கிழமை 10 மணி முதலே ஈரோடு, கரூா், கோவை என பல்வேறு மாவட்டங்களைச் சோ்ந்த மாணவ, மாணவிகள் அதிக அளவில் வரத் தொடங்கினா். இந்த மாணவா்கள் அனைவரும் உடல் வெப்பம் பரிசோதிக்கப்பட்டு தோ்வு அறைகளுக்குள் அனுமதிக்கப்பட்டனா். மேலும், தோ்வு வளாகத்தில் 100க்கும் மேற்பட்ட காவல் துறையினா் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.